Thursday, 14 January 2016

paradesi@newyark....திருமிகு ஆல்ஃபின் அவர்களுடன் ஒரு சந்திப்பு

வலைப்பூ நண்பர் திருமிகு ஆல்ஃபி அவர்களுடனான சந்திப்பு

”ஏழைக்கு கடன் கொடுத்தவன் இறைவனுக்கு கடன் கொடுக்கிறான்” -பைபிள்

என்ற பைபிளின் வாக்கியத்தை மனதார ஏற்று அதன் படி தன்குடும்பத்திற்கு தேவைக்கு போக மீதி உள்ள வருமானத்தை ஏழைகளுக்காக செலவிடுகிறேன் என்ற ,அமெரிக்காவில் தலைசிறந்த நிறுவனத்தில் துணைத்தலைவராகப்பணியாற்றும் வலைப்பூ நண்பர் திருமிகுஆல்ஃபி அவர்கள், நேற்று புதுகையில் உள்ள வலைப்பூ நண்பர்களைக்காண ,தனது நண்பர் தமிழ்பேராசிரியர் பிரபாகர் அவர்களுடன் மாலை 6 மணியளவில் ஆக்ஸ்போர்டு உணவகக்கலைக்கல்லூரிக்கு வந்திருந்தார்..

இச்சந்திப்பிற்கு புதுகை கணினி தமிழ்ச்சங்க ஒருங்கிணைப்பாளர் கவிஞர் நா,முத்துநிலவன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்...
கணினி தமிழ்ச்சங்க உறுப்பினர்களுடன், மாணவர்களும் அவரைக்காணும் ஆவலில் வந்திருந்தனர்..

தமிழ் வழியில் படித்ததால் ஆங்கிலம் பேச முடியலன்னு சொன்னா நான் ஒத்துக்கவே மாட்டேன்...இதற்கு உதாரணம் நான் தான்..தமிழ்வழியில் படித்து ஆங்கில இலக்கியத்தை கல்லூரியில் தேர்வு செய்து...ஆங்கிலத்தில் பேச இவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளே இன்று இவர் பலருக்கு அமெரிக்காவில் பணி செய்ய, தேர்வு செய்யும் தகுதியைக்கொடுத்து தலைவராக்கி உள்ளது...

நான் சென்னையிலிருந்து யாருடன் வந்தேன் தெரியுமா என்ற போது யாராக இருக்கும் என்று யோசித்த போது அவரே திரு சகாயம் அவர்களுடன் வந்தேன் என்ற போது இவரின் நேர்மை வெளிச்சமாகியது..

கூடலூருக்கு அருகே உள்ள மலைக்கிராமத்தை தேர்வு செய்து அங்குள்ள மலைவாழ் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து செலவுகளையும் செய்து படிக்க வைக்கின்றார்...இந்த பொங்கலை அவர்களுடன் கொண்டாட இப்போது சென்று கொண்டுள்ளார்..

எளிமையும் ,நேர்மையும் ,ஏழைகளுக்கு இரகும் குணமும் கொண்ட இவரது பண்பு அனைவரையும் வியக்க வைத்தது..

மாணவர்களுக்கு அயல் நாட்டில் பணி பெற தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்..

முயற்சி இருந்தால் விண்ணையும் தொடலாம் என்பதற்கு இவரே உதாரணம்...

மதுரை .அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக இருக்கும் இவரது தோழர் திருமிகு பிராபகர் அவர்களின் பேச்சும் பயனுள்ளதாக அமைந்தது







12 comments:

  1. எளிமையான மனிதர்... வாழ்த்துகள்...

    முகநூல் மட்டுமில்லாமல் இங்கும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...

    ReplyDelete
  2. இனியதோர் சந்திப்பு பற்றி கேட்க மகிழ்ச்சியாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  4. நண்பர் திரு. ஆல்ஃபி அவர்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  5. வணக்கம்
    நிகழ்வை அருமையாகா படம்பிடித்து காட்டியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. தமிழர் திருநாள் வாழ்த்துக்களை
    மகிழ்வோடு நவில்கின்றேன்
    கனிவோடு ஏற்றருள்வீர்

    ReplyDelete
  8. ஆல்பி ஓரு நல்ல மனிதர்.விழா சிறப்பாக நடந்தமைக்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  9. என்னால் உடனடியாக எழுத முடியலைம்மா. (வேறுசில அவசர வேலைகள்)
    அழகாக எழுதிவிட்டீர்கள்.. ஆனால் சொல்லில் சொல்லி முடிக்கமுடியாத பண்புகளும், ஆற்றலம் மிக்கவரான திரு ஆல்ஃபி அவர்களை நம்மோடு தொடர்புபடுத்திய திரு விசு அவர்களுக்கும், வலையுலகிற்கும்தான் நன்றிகளைச் சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  10. 2016 தைப்பொங்கல் நாளில்
    கோடி நன்மைகள் தேடி வர
    என்றும் நல்லதையே செய்யும்
    தங்களுக்கும்
    தங்கள் குடும்பத்தினருக்கும்
    உங்கள் யாழ்பாவாணனின்
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete
  11. ஆல்ஃபி பற்றி நண்பர் விசு நிறைய சொல்லியிருக்கிறார். அவர் பல உதவிகள் செய்துவருகின்றார் சத்தமில்லாமல்! நல்ல மனிதர் என்பது அவரது வலைத்தளத்திலேயே தெரியும். விழா சிறப்பாக நடந்தமைக்கும், சந்திப்பிற்கும் வாழ்த்துகளுடன் மகிழ்வும். நல்ல நிகழ்வு!

    ReplyDelete
  12. நான் அங்கு வந்த சமயம், கனிவோடு என்னை வரவேற்று உபசரித்த நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் பணிவான நன்றிகள்.
    என்னுடைய விடுமுறையை நன்கு முடித்து நியூயார்க் வந்து சேர்ந்து விட்டேன்.விரைவில் பதிவுகளை தொடர்வேன்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...