Thursday, 14 January 2016

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்

அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள்
--------------------------------------------------------------------

பொங்கலே வா..
தேர்தல் வரப்போகின்றது
தேவையென்ன கூறு..

நிலம் மட்டும் கேட்காதே
ரியல் எஸ்டேட் ஆகிவிட்டது

நீர் வேண்டுமென்காதே
மூழ்கிய சென்னை கதறுகின்றது...

விவசாயி மகனெல்லாம்
அவமானமென நிலம் தொட மறுக்கின்றார்..

மாடு பிடிப்பதை விட
நாடு பிடிப்பது எளிதாய்...

தடை ,அனுமதி,தடையென
மயங்கி நிற்கிறது
மத்திய அரசு..

குக்கரில் வெந்திட 
மனமுவந்தே வா

பொங்கலோ பொங்கலென
பொங்கலே வா வா..

15 comments:

  1. தமிழர் திருநாள் வாழ்த்துக்களை
    மகிழ்வோடு நவில்கின்றேன்
    கனிவோடு ஏற்றருள்வீர்

    ReplyDelete
  2. //குக்கரில் வெந்திட மனமுவந்தே வா//

    :)

    அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. வணக்கம்
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்-2016

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. ///
    நிலம் மட்டும் கேட்காதே

    ரியல் எஸ்டேட் ஆகிவிட்டது// உண்மைதான்!!
    இன்றைய நிலை சொல்லும் கவிதை அருமை கீதா

    ReplyDelete
  5. 2016 தைப்பொங்கல் நாளில்
    கோடி நன்மைகள் தேடி வர
    என்றும் நல்லதையே செய்யும்
    தங்களுக்கும்
    தங்கள் குடும்பத்தினருக்கும்
    உங்கள் யாழ்பாவாணனின்
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete
  6. இனிய தமிழர் தின நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  7. தென்றலுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் மற்றும் தென்றலின் அன்பு நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!!த.ம.2

    ReplyDelete
  8. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  9. பொங்கல் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  10. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. வரிகளும் பல அர்த்தங்கள். வாழ்த்துகள்!

    ReplyDelete
  12. இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் ..

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...