Monday, 18 January 2016

வீதி கலை இலக்கியக் களம்-22

வீதி கலை இலக்கியக் களம்-22

நாள்:27.12.15

இடம்:ஆக்ஸ்போர்டு உணவகக்கலைக்கல்லூரி,புதுகை

தலைமை :கவிஞர் நா.முத்துநிலவன்

சிறப்பு அழைப்பாளர்:கவிஞர் .இரா .தனிக்கொடி
[கொம்பன்,தாரைத்தப்பட்டை திரைப்பட பாடலாசிரியர்]

சிறுகதை:கவிஞர் மூட்டாம்பட்டி இராஜூ

கவிதை:கவிஞர்கள் மீரா.செல்வகுமார்,பவல்ராஜ்,ரேவதி.

ஓவியக்கட்டுரை:திருமிகு நா. சுப்ரமணியன்.

அமைப்பாளர்கள்:திருமிகு பொ.கருப்பையா மற்றும் நாகநாதன்.


நிகழ்வுகள்

*வரவேற்பு- கவிஞர் பொன் .கருப்பையா அவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்றார்.
*அஞ்சலி-வெள்ளத்தில் உயிரிழந்தோருக்காக ஒருநிமிடம் அஞ்சலி வீதி அமைப்பின் சார்பில் செலுத்தப்பட்டது.






*தலைமை உரை-கவிஞர் நா,முத்துநிலவன் அவர்கள் தனது உரையில் இவ்வாண்டின் டிசம்பர் மாதம் பல உணர்வுகளை உள்ளடக்கியதாக ,மகிழ்வு ,சோகம் ,வேதனை அத்தனையும் கலந்த மாதமாக உள்ளது.

கவிஞர் இரா,தனிக்கொடியின் தாரைத்தப்பட்டை திரைப்படப்பாடல் வெளியீடு நடந்துள்ளது.

புதுகையில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் திறக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் மனநிலையைக்கூறும் பசங்க-2 படம் வெளிவந்துள்ளது.

வெண்மணியின் துயரங்களை டிசம்பர் 25 நினைவூட்டியது..

கரைபுரண்ட வெள்ளம்....மனிதநேயத்தை வெளிக்கொணர்ந்தது..என தனது நெகிழ்வான நினைவலைகளாக தலைமைஉரையை நிகழ்த்தினார்.

கவிதை-

கவிஞர் மீரா செல்வகுமார் ”நல்லா  வருவீங்க”என்ற சென்னை வெள்ளத்திற்கு பிறகான மக்களின் திருந்தாத நிலையை எடுத்துக்காட்டியது..,இரண்டாவது கவிதை  சென்னை -புதுகை பேருந்து பயணத்தின் காட்சிகளை கண்முன் நிறுத்தியது.
கவிஞர் பவல்ராஜ் அவர்கள் தனது வழக்கமான நகைச்சுவையான பாணியில் கவிதைகளைத்தந்தார்.
’மழைக்கு ஒதுங்க/பயமாய் இருக்கிறது/பள்ளிக்கூடம் ”என்ற கவிதை கட்டிடம் கட்டியவர்களின் ஊழலை உணர்த்தியது.

கவிஞர் ரேவதி ”பெண்சாதி படும் படும் சேதி “என்ற தலைப்பில் குடிகாரக்கணவனின் மனைவியின் வேதனைகளைக்கூறினார்.
”தொலைந்தது போதும்”என்ற கவிதை   நாம் தொலைத்த இளமை அனுபவகளை நினைவூட்டியது...அருமை.

சிறுகதை-

”பூனைத்தலை”-மூட்டாம்பட்டி ராஜு
 

கழிவகற்றும் பணி செய்பவர்களின் அவலத்தையும்,மக்களின் அக்கறையின்மையையும் தனக்கே உரிய பாணியில் படைத்திருந்தார்..பாலிதீன் பை அவருக்கு நசுங்கிய பூனைத்தலையாக காட்சியளித்தது நல்ல கற்பனை..

ஓவியக்கட்டுரை



 ஓவியர் சுப்ரமணியன் அவர்கள் குழந்தைகள் கிறுக்குவதை தடை செய்யாதீர்கள்.அது அவர்களின் ஓவியம்...உங்களுக்கு வேண்டுமானால் புரியாமல் இருக்கலாம்..எனத்துவங்கி. சித்தன்ன வாசலின் பெருமைகளை எடுத்துக்கூறி வியக்க வைத்தார்.ஓவியங்களின் தன்மைகளை விரிவாக விளக்கியதுடன் அவரது அழகான அன்பைக்காட்டும் ஓவியமொன்றை காட்சிப்படுத்திய போது வீதி கலை இலக்கியக்களம் என்பது இன்றுதான் நிரூபித்துள்ளது...என்றார் கவிஞர் நா.முத்து நிலவன்.

வெள்ளநிவாரணப்பணி அனுபவம்



விதைக்Kalam-குழுவினர் யு.கே.கார்த்திஸ்ரீமலையப்பன்,கஸ்தூரிரங்கன்,செல்வக்குமார் ஆகியோர் கடலூருக்கு வெள்ள நிவாரணப்பணிகளுக்காக ரூ 4,00,000 மதிப்புள்ள பொருட்களை எடுத்துச்சென்று நேரில் கொடுத்து வந்த போது ஏற்பட்ட சிரமங்களையும்,மக்களின் உணர்வுகளையும் எடுத்துக்கூறினர்.

சிறப்பு அழைப்பாளர் உரை



கவிஞர் தனிக்கொடி அவர்கள் தனது உரையில் வீதிகள் இணையும் இடம் சதுக்கம் என்பர் அதுபோல் இலக்கியவாதிகள் இணையும் இடமாக வீதி செயல்படுவது சிறப்பு...கவிதைகள்,சிறுகதை,கட்டுரைகளுக்கு ஆரோக்கியமான விமர்சனங்கள் கூறப்படுவது அவர்களை மேலும் எழுதத்தூண்டும் வகையில் உள்ளது.

பெண்கள் எழுதவேண்டும்..பெண்ணின் இருப்பு இங்கே ஆணைச்சார்ந்தே உள்ளது...பெண்களின் கைகளில் யுகாந்திரமாக சோற்றுமணமே வீசிக்கொண்டுள்ளது என்ற அம்பையின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தார்.ஆண்கள் வெளியே சென்றவுடன் அவர்கள் அவர்களாக வாழ்கிறார்கள்..

ஆதவன் தீட்சண்யாவின் வீட்டுக்குள்ளே ஒரு சேரி சமையலறை என்ற வார்த்தைகளைக்கூறி இன்றும்அது ஆண்கள் தீண்டப்படாத இடமாக கருதப்படுவதை  எடுத்துரைத்தார்.
தாய்மை என்பதே அடிமைத்தனத்தின் உச்சம்..இதனால் ஆண்கள் தங்களது பொறுப்புகளை பெண்கள் மீது சுமத்திவிடுகிறார்கள்...என்றார்.....
நன்றியுரை
கவிஞர் வைகறை நன்றி கூற வீதியின் 22 ஆவது கூட்டம் மிகச்சிறப்புடன் முடிந்தது..




6 comments:

  1. வீதி நிகழ்வினைப் பகிர்ந்தமைக்கு நன்றி. இவ்வாறான தொடர் நிகழ்வுகள் நடத்தப்படுவது சற்றுச் சிரமமே. இக்குழுவில் ஈடுபட்டு நடத்திவரும் அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள்.

    ReplyDelete
  2. நிகழ்வினை விளக்கமாக பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  3. மறைந்து வரும் நம் பண்பாட்டினை மீட்க இப்படி பட்ட வீதி இலக்கிய விழா கட்டாயம் தேவை. அதை தொடர்ந்து கடைப் பிடித்துவரும் புதுக்கோட்டைக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
    ஆன்ற பெருமை தரும்

    ReplyDelete
  5. //வீதி கலை இலக்கியக் களம்-22 - நாள்:27.12.15 - இடம்:ஆக்ஸ்போர்டு உணவகக்கலைக்கல்லூரி,புதுகை - தலைமை :கவிஞர் நா.முத்துநிலவன்//

    விழா பற்றிய நிகழ்ச்சிகளையும், படங்களையும், விரிவாகவும் விளக்கமாகவும் கொடுத்துள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  6. நிகழ்வை அழகாகத் தொகுத்துப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ! பெருகட்டும் வீதி கலை இலக்கியக் களத்தின் பணிகள்! வாழ்த்துகள்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...