Wednesday, 16 September 2015

thukkamaa-தூக்கமா,கலக்கமா.ஏன் தாமதம்?

அன்பான வலைப்பூ சகோதர சகோதரிகளுக்கு

ஆயிரக்கணக்கான வலைப்பதிவர்கள் உள்ள தமிழ் வலைப்பதிவர்களில் 130 வலைப்பதிவர்கள் வருகையும்,கையேட்டிற்காக 38 வலைப்பூ முகவரிகளும் மட்டுமே பதிவாகி உள்ளன.

குறைவாக 500 முகவரிகளாவது இருந்தால் தான் நூல் சிறப்பாக அமையும்.

வலைப்பதிவர் கையேடு உங்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே சிறப்புடன் இருக்கும்..நமக்கான ஒரு கையேட்டை கொண்டுவர நாங்கள் காத்திருக்கையில் ஏன் இத்தனை தாமதம்...உங்கள் வலைப்பூவை நாங்கள் அறிய வேண்டாமா...?

20.9.15 க்குமேல் கையேட்டு நூல் வேலை ஆரம்பிக்க உள்ளதால் விரைந்து நீங்களும் உங்களது நண்பர்களும் பதிவு செய்ய அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்...

இது நம்ம விழாங்க...கூப்பிடுங்க எல்லாரையும்..

20 comments:

  1. இதுவரை வந்தது மூன்றில் ஒரு பங்கு தான்...

    ReplyDelete
  2. 20-ம் தேதிக்குள் இன்னும் பலர் விவரம் தந்துவிடுவார்கள் என்று நம்புவோம்!

    ReplyDelete
    Replies
    1. நம்பிக்கைதானே வாழ்க்கை..

      Delete
  3. வியப்பாக இருக்கிறது சகோதரியாரே

    ReplyDelete
  4. உங்களுடன் சேர்ந்து நானும் நண்பர்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன். வலைப்பூ நண்பர்களே, கையேடு தயாரிக்க உதவியாக விவரங்களை அனுப்பி உதவுக.

    ReplyDelete
  5. விரைவில் அனைவரும் தகவல்கள் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புவோம்.....

    ReplyDelete
  6. சகோதரி மு. கீதா வேண்டுகோள் விடுத்தது போல நம் வலைப்பக்க ஆர்வலர் அனைவரும் இதுபோல வேண்டுகோள் விடுத்து, அனைவரையும் கையேட்டில் இடம்பெறச் செய்ய வேண்டும். அதுதான் வெற்றியின் ஊற்றுக்கண்.

    ReplyDelete
  7. நிறைய தளங்களுக்குச் சென்று முரசறைந்திருக்கிறேன் :-)

    ReplyDelete
    Replies
    1. நீங்க யாரு கீதாவின் மறு பிம்பமாச்சே..

      Delete
  8. என் குறிப்பு வந்து சேர்ந்ததா?

    ReplyDelete
    Replies
    1. குறிப்புடன் உங்களது அன்பான நன்கொடையும் வந்து விட்டன அய்யா...உங்கள் வருகை தான் பாக்கி....காத்திருக்கின்றோம்..அய்யா.

      Delete
  9. பெருந்திரளில் சங்கமிக்கச் சற்றுத் தயங்கி நிற்கும் வலைப்பதிவர்கள் கடைசி நேரத்தில் களமிறங்கி திக்குமுக்காடச் செய்யப்போகிறார்கள் பாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியும் நிகழ வாய்ப்புண்டு அய்யா.

      Delete
  10. உங்களின் இந்த பதிவை மேற்கோளாக வைத்து, ”வலைப்பதிவர் கையேடும் கலக்கமும்” என்ற ஒரு பதிவை நான் எழுதியுள்ளேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பார்த்தேன் மிக்க நன்றி சார்.

      Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...