Friday, 18 September 2015

கேள்விகளால் துளைக்கவோ நானும்?-வலைப்பதிவர்சந்திப்பு 2015 புதுக்கவிதைப்போட்டி



வலைப்பதிவர்சந்திப்பு 2015 புதுக்கவிதைப்போட்டி
-------------------------------------------------------------------------

கேள்விகளால் துளைக்கவோ நானும்?-


என்னிடம் கேள்வி கேட்கும்
எல்லாரிடமும் கேட்க
கேள்விகள் என்னிடமும் உள்ளன.


கையூட்டை சாடிக்கொண்டே
கையூட்டு பெறும் அப்பாவை நோக்கி
பறக்கின்றன அவைகள்...

அண்ணனுக்காய் தனியாகப்பரிமாறும்
அம்மாவையும் ஒருகை பார்க்க
துடிக்கும் அவைகளை ஆசுவாசப்படுத்துகின்றேன்..

துள்ளிக்குத்தோடும் என்னை பார்வையால்
மிரட்டி ஒடுக்கி  கல்லூரி வாசலில் தவமிருக்கும்
அண்ணனுக்காக காத்திருக்கின்றன...

பேருந்தில் உரசுமவனை வெட்டிக்குதற
பேராவல் கொண்டே திரிகின்றன.

சுத்தம் சோறு போடும் பழமொழியை
நனைக்கும் அவனின் செயலைக்கண்டு
வெட்கித்தவிக்கின்றன....

ஊழற்ற ஆட்சி அமைப்போமென்றே கூறி
ஊழலுக்குள் புதைந்தவர்களை
தாழிக்குள் புதைக்கத்தயாராய் ...வெறித்தபடி...

ஒற்றுமையின்றி சாதிப்பித்தேறி தடுமாறுபவனை
ஒன்று திரட்டி மதச்சண்டைக்கு தயாராக்கும்
தலைவனை அழித்தொழிக்க தவமிருக்கின்றன.


கேள்விக்கணைகளை தவிடு பொடியாக்கிட
கேள்விகளையே சாட்சியாக்கி சிதறடிப்போம் வாரீர்

-------------------------------------------------------------------------------------------

இப்படைப்பு *"வலைபதிவர் சந்திப்பு 2015 மற்றும் தமிழ்இணைய கல்வி கழகம் நடத்தும் "மின்தமிழ் இலக்கிய போட்டிகள்"களுக்காக நான் எழுதிய சொந்த படைப்பாகும்!

*வகை (4) புதுக்கவிதை போட்டி!
முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவைகள்!
இதற்குமுன் எங்கும் வெளியானதல்ல என்றும் முடிவுகள் வெளியாகும்வரை  வேறெங்கும்  வெளிவராது என்றும் உறுதியளிக்கின்றேன்!


தென்றல் கீதா

20 comments:

  1. வணக்கம்! தங்கள் வரிகள் அருமை! வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி!!

    தாங்கள் என் தளம் வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றிகள் பல! வலைப்பூவிற்கு புதியவன் நான்!! வாருங்கள் ஊக்கப்படுத்துங்கள் நன்றி!!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி வருகை புரிந்து வாழ்த்தியமைக்கு.தொடர்ந்து எழுத வாழ்த்துகள்...

      Delete
  2. அழகான ஆழமான சிந்தனைகள்....பிறர் சிந்தையை தூண்டும் சாட்டையடி கருத்துக்கள்....

    போட்டியில் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. தோழமைக்கு மிக்க நன்றி வாழ்த்தியமைக்கு.....

      Delete
  3. ஆகா
    வெகு அற்புதமாக வந்திருக்கிறது அறசீற்றம் ...
    வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. ஒரு ஆறுதல் பரிசாவது கிடைக்க வாழ்த்துங்கள் சகோ.

      Delete
  4. ஆகா! தீர்க்கமான சிந்தனைகள்!
    போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் கீதா

    ReplyDelete
  5. கேள்வி கேட்கத் துடிக்கும் கண்கள்
    கேவாமல் உற்று நோக்கியே
    உண்மைகளை உணர்த்துகிறது !

    புலன் வழிசென்று புதைக்கப் படுவன வெலாம்
    புறப்படக் கணையாகிறது கண நேரத்தில்!

    அருமையான சிந்தனைகள் வெற்றி பெற என்மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  6. இனி ஒரு பிள்ளை கேள்வி கேட்க வாய்திறக்கும்!!! அடிச்சு நொறுக்கிடீங்க அக்கா!! செம!! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. சரியான போட்டியைத்தான் புதுக்கோட்டை பதிவர்கள் தொடங்கியிருக்கிங்க. வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
  9. அருமையான கேள்விகள்.....

    வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. "அண்ணனுக்காய் தனியாகப்பரிமாறும்
    அம்மாவையும் ஒருகை பார்க்க
    துடிக்கும் அவைகளை ஆசுவாசப்படுத்துகின்றேன்.." ...வீட்டுக்கு வீடு வாசப்படி.... விஷயங்கள் ஆசைப்படி.... எங்கெங்கும் போராட்டந்தான் ...வாழ்க! வளர்க! வெல்க!... கோகி.

    ReplyDelete
  11. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. அடடா அடடாஐம்பதாயிரத்தில் அரைகாசுகூடநமக்குக்கிடைக்காதுபோலல்ல இருக்கு தளத்துக்குத்தளம் ஒரே அசத்தலால்ல இருக்கு,வாழ்த்துக்கள்தோழி.

    ReplyDelete
  13. நெற்றிக் கண்ணத் திறக்க உங்களுக்குக் கற்றுக் கொடுத்தது யார்? சரியான பாதையில் பயணிக்கிறீர்

    ReplyDelete
  14. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. துகளறத் துடிக்கும் கேள்விகள்-விடை பகர்ந்திடா தெரிக்கும் வேள்விகள்

    ReplyDelete
  16. அருமையான கவிதை. வெற்றிபெற வாழ்த்துகள் சகோ :)

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...