Thursday, 10 September 2015

bloggers meet- வலைப்பதிவர் திருவிழா-5

விழாப்பணிகளில் விழாமல்


விழா ஏற்பாடுகள் சிறப்பாக ஒருவரை ஒருவர் கேட்காமலும் கேட்டும்...நடந்து கொண்டுள்ளன ..கண் முன் இப்படிதான் விழா நடக்கப்போகிறது என்பது காட்சியாய் விரியத்துவங்கி விட்டது....

பங்கேற்ப்போர் பட்டியல் டி.டி.சாரின் உதவியுடன் தயாராகிக்கொண்டுள்ளது.

உணவு ஏற்பாட்டுக்கு சகோதரி ஜெயா தயாராகி விட்டார்கள்..முடிந்தால் இன்னுமொரு வயிறு எடுத்துக்கொண்டு வாருங்கள்...உபசரிப்பில் அவர்களை மிஞ்ச ஆள் இதுவரை பிறக்க வில்லை....


முன் கூட்டியே வருபவர்களை வரவேற்க  செல்வாவும் வைகறையும் காத்திருக்கின்றனர்...முன் ஏற்பாடுகளை அவர்களிடமே கலந்தாலோசிக்க வேண்டியிருக்கும்...

கையேட்டுக்கான பணிகளில் சகோதரர் கஸ்தூரி ரங்கனும்,மலையப்பன் ஆசிரியரும்  மூழ்கி விட்டனர்.

கவிதை சேகரிப்பில் தங்கை மைதிலியும் ,வைகறையும் மூழ்க..கவிதைகளை கண்காட்சியாக்கும் பணியில் ஸ்டாலின்,நீலா,சுரேஷ்மான்யாவுடன் ஓவியர்கள் அடங்கியக்குழு திரண்டு விட்டது...

புத்தகங்களை நினைவுப்பரிசாக அளிக்க சேகரிக்கும் பணியை வைகறை தனியொரு ஆளாகவே நின்று முடித்துவிட்டார்.


தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை அனைவரும் செவ்வனே செய்து கொண்டுள்ளனர்...

பதிவர் வருகைப்பதிவு விரைவில் முடிந்தால் திட்டமிடலுக்கு மிகவும் வசதியாக இருக்கும்....

விழாவில் கலந்து கொள்பவர்களுக்கு கைநிறைய அள்ளிப்போகும் படி பரிசுகள்,அன்பளிப்புகள் வழங்க மிகுந்த ஆவலோடு இருக்கின்றோம்....

நிதியில் உங்களின் பங்களிப்பையும் அளித்து கொண்டுள்ளதை அறிந்து மிக்க மகிழ்ச்சி..தொடர்ந்து உங்கள் ஆதரவை வரவேற்கிறோம்...




24 comments:

  1. ஒவ்வொன்றும் சிறப்பான ஏற்பாடுகள்...

    முக்கிய விசயம் நாளை எனது பகிர்வில்...!

    ReplyDelete
  2. தாகம் கொண்ட நதிகள் சந்தித்துக்கொள்ளும்
    இனிமையான அனுபவம்/

    ReplyDelete
    Replies
    1. சந்திப்போம் இனியமையான விழாவில்.

      Delete
  3. Replies
    1. sir! please refer to the blog http://bloggersmeet2015.blogspot.com/2015/09/26-30.html

      Delete
    2. you will get peace here for sure:) Pudukkottai awaits your arrival!!!

      Delete
  4. படிக்கப் படிக்க மனம் இனிக்கிறது சகோதரியாரே
    தம+1

    ReplyDelete
  5. vanakam alaipu idhalai yarkanava paarthan. marupadium vila kulu saarpaga alithamiku vaalthukal.

    ReplyDelete
  6. ஒவ்வொருவரின் பணியையும் குறிப்பிட்டு அவ்வப்போது நிலையினைப் பகிர்ந்துகொள்ளும் முறை பாராட்டத்தக்கது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சுற்றி சுற்றி வேலை நடக்கிறது அய்யா.நன்றி

      Delete
  7. ஆஹா அருமையாக சொல்லியுருக்கிறீர்கள்,,,,,,,,,,,
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. புதுக்கோட்டையில் வலைப்பதிவர் திருவிழா
    சிறப்பாக இடம்பெற வாழ்த்துகள்

    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்,

      Delete
  9. உணவு ஏற்பாட்டுக்கு சகோதரி ஜெயா தயாராகி விட்டார்கள்..முடிந்தால் இன்னுமொரு வயிறு எடுத்துக்கொண்டு வாருங்கள்...= மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா காத்திருக்கின்றோம்..அம்மாவுடன் உங்களைக்காண.

      Delete
  10. Updated...

    நன்கொடை விவரங்களை அறிய இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/blog-page_29.html

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...