Thursday, 4 June 2015

இந்துவா நான்?


மரவட்டையென நெளிந்து
மிரட்டிச்செல்லுமதிலிருந்து
வீழும் மலத்தை
வரண்டிச்சுமந்து பிழைத்தே
வாய்ச்சோறு உண்ணுபவன்

வீழ்ந்திடும்என்னினம்
வீரியமுடன் எழவே
கடவுளுக்கு அருகில்
கண்ணியமுடன் எனை
சமத்துவமாய் நடத்துவீரோ
சூத்திரெனென்றே இகழாமல் இருப்பீரோ
மதம் மாறிய உறவுகளை
மீட்டே தருவீரோ

நமக்குள்ளே எனை அடிமையாக்கி
இந்து என்றால் என்னா....ம....
இந்துவா இருக்கனும்......

5 comments:

  1. அருமை சகோ....அருமை.

    ReplyDelete
  2. அப்படிப் போடு! என்ன ஒரு வீரியமிக்க வரிகள்.
    கடைசி வரிகளை ஃபில் அப் செய்தே போட்டிருக்கலாம்.
    அந்த அளவிற்கான ஆவேசம் தேவைப்படுகிறது.
    (உங்களுக்காக புதிய மாதவியின் கவிதைத் தொகுப்பு ஒன்றை வைத்திருக்கிறேன்... நேரில் தருவேன்) சத்தியஆவேசம் தொடரட்டும். தொடரக்காததிருக்கிறேன். தம2

    ReplyDelete
  3. ஆவேச வரிகள்
    உண்மை வரிகள்
    தம +1

    ReplyDelete
  4. அன்பு வலைப்பூ நண்பரே!
    நல்வணக்கம்!
    இன்று 08/06/2015 அன்று முதலாம் ஆண்டினை நிறைவுசெய்யும் "குழலின்னிசை"க்கு
    தங்களது அன்பான ஆதரவும், கருத்தும், அளித்து அகம் மகிழ்வுற செய்ய வேண்டுகிறேன்.

    முதலாம் ஆண்டு பிறந்த நாள் அழைப்பிதழ்
    அன்பின் இனிய வலைப் பூ உறவுகளே!
    "குழலின்னிசை" என்னும் இந்த வலைப் பூ!
    உங்களது மனம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த மகிழ்ச்சிகரமான நாள் இன்று.
    ஆம்!
    கடந்த ஆண்டு இதே தினத்தன்றுதான் 08/06/2014, "குழலின்னிசை" வலைப்பூ மலர்ந்தது.
    http://kuzhalinnisai.blogspot.com/2015/06/blog-post_7.html#comment-form
    சரியாக ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வலைப்பூவானது, நல் இசையை நாள்தோறும் இசைத்து, அனைவருக்கும் நலம் பயக்குவதற்கு, உள்ளன்போடு உங்களது நல்லாசியைத்தாருங்கள்.
    தங்களது வருகையை எதிர் நோக்கும் வலைப்பூ நண்பர்கள்.
    மற்றும்!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    TM 4

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...