Tuesday, 2 June 2015

முழுநிலா முற்றம் -5 ஆவது கூட்டம்

இன்று முழுநிலா முற்றம்-5 ஆவது கூட்டம்

புதுகையில் உள்ள ஏ.எல்.ஏ.மழலையர் பள்ளியில் சிறப்புடன் நடந்தது.

பௌர்ணமி நிலா மேகக்கூட்டங்களுக்கிடையே மறைந்து விளையாட...மேகம் தரை தொட்டு மகிழ்ந்தது...

நாகநாதன் தனது தேடுகிறோம் என்ற கவிதையை வாசிக்க,

 அமிர்தா தமிழ் அவரளின் புதல்வி எழிலோவியா நிலாவைப்பற்றி குட்டிக்கவிதை வாசித்ததுடன்,சுப உதயக்குமார் எழுதிய” பச்சைத்தமிழ் மனது” என்ற நூலை பற்றி விமர்சனம் செய்த விதம் அருமை...

பள்ளியின் முதல்வர் அண்ணாத்துறை அவர்கள் படித்ததில் பிடித்தது என கவிஞர் நா.காமராசு  வின்  அம்மாவாசை பற்றிய கவிதை,கண்ணதாசனின் ”மாங்கனி” என்ற கவிதை நூல் பற்றியும் துவக்க காலத்தில் தான் எழுதிய வாசித்த கவிதைகளையும் கூறினார்.

கவிஞர் மகா.சுந்தர் இறையன்பு அவர்களின் நூலில்,பூனைக்கு யார் மணியைக்கட்டுவது என்ற கதை ,
கோன் ஐஸ் உருவான வரலாறு
முன்னாள் பிரதமர் மாண்புமிகு நேரு அவர்கள் தனது நேரத்தை திருடிய விதம் பற்றியும் கூறி,
கவிஞர்களை விட உழவனின் கூற்றான அடர்ந்த வனத்தை
  “ஈ புகுந்தால் சிறகொடியும்”ன்ற கூற்றின் சிறப்புக்குறித்தும்

 அமைதியான கடல் ஆற்றலுள்ள மாலுமியை உருவாக்கும் என்ற ஆட்டோவில் எழுதப்பட்ட சிந்தனையை பகிர்ந்ததுடன் ..முடிவில் ஆனந்தயாழை மீட்டுகிறாய் என்ற தேசிய விருது பெற்ற  பாடலைப்பாடி கூட்டத்திற்கு மெருகூட்டினார்.

தனது குடும்பத்துடன் கலந்து கொண்ட கவிஞர் வைகறை கூட்டத்தை மேலும் செம்மையாக்கும் கருத்துகளை கூறியதுடன்.ஒரு நாளில் 24 நான்கு மணி நேரத்தை அதிகரிக்கும் யுக்தியை கூறினார் .

சிங்கப்பூரில் பணி புரியும் முகநூல் நண்பர் யாழிசை மணிவண்ணன் அவர்களின் கவிதைகளில்
         ” சுருங்கிய பின்
         சுமையாய் தெரிகிறது
        குடை”
என்ற கவிதை வாழ்வின் யதார்த்தத்தைச்சுட்டுவதாய் அமைந்தது.

கவிஞர் நீலாவின் பயண அனுபவம் எங்களையும் அவர்களுடன் பயணிக்க வைத்தது...இறுதியில் நிலாவைப்பற்றி பாடலை பாடி கூட்டத்தை இனிமையாக்கினார்...ஆலங்குடியிலிருந்து இதற்காகவே வந்த அவரின் பண்பை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ஜெயா  அருண் மழலையர் பள்ளியில் தான் பார்த்து வியந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்..

நான் நிலா பற்றிய கவிதைகள் வாசித்து,மதுரையில் பார்த்த பொன்னியின் செல்வன் நாடகத்தைக்குறித்தும் பேசினேன்.

நிகழ்வின் சிறப்பாக கவிஞர் ரேவதி தனது தனி நடிப்புத்திறன் மூலம் நாடகம் நடித்து அனைவரையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்தார்.  திருமிகு.வேலு.விஜயபாரதி,தினேஷ்குமார்,மணிவண்ணன்,லாவண்யா,சகோதரி ரோஸ்லின்,ஜெய் குட்டி ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முழுநிலா முற்றத்திற்கு இடத்துடன் ,பால்கேக்,பப்ஸ்,டீயும் தந்து வயிற்றுக்கும் உணவளித்து மகிழ்ந்தார் பள்ளியின் தாளாளர்.திருமிகு .அண்ணாத்துரை. தோழி ஜெயா கோதுமைப்பால் அளித்து கூட்டத்தை நிறைவு செய்தார்...

மழையும் கலந்து கொண்டு முழு நிலா முற்றத்தின் ஐந்தாவது கூட்டத்தை சிறப்பித்தது.

6 comments:

  1. வர இயலாதவர்கள் தங்கள் பதிவு மூலமாக அக்குறையைத் தீர்த்துக்கொள்கிறோம். நன்றி.

    ReplyDelete
  2. நீலா அக்கா வந்தார்களா...
    கூட்டம் மாஸா இருந்திருக்கும் போல
    வாழ்த்துக்கள் வைகறைக்கும் உங்களுக்கும்

    ReplyDelete
  3. நான் தான் வரமுடியாமல் போய்விட்டது.
    வருந்துகிறேன்.

    ReplyDelete
  4. தொடரட்டும் சந்திப்புகள்.... நிலா முற்றத்தோடு எங்களைப்போல சுற்றும் முற்றும் இருப்பவர்களையும் கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...