Thursday, 30 April 2015

மே தின வாழ்த்துகள்


அம்மாவின் உழைப்பை
குடும்பம் மறந்தது

உழுபவனின் உழைப்பை
உலகம் மறந்தது

உழைக்காமல் வாழும் வாழ்வையே
உலகோர் விரும்ப...

உழைப்பின் சுவையறியா குழந்தைகளையே
உருவாக்குகிறது கல்வி..
உழைப்பை ஏளனமாய் எண்ணி
எத்தி தள்ளும்படி...

உடலுக்கும் உள்ளத்திற்கும்
உழைப்பே மகிழ்வைத்தருமென்பதை
உணரும் குழந்தைகளை
உருவாக்குவோம்...
வீட்டில் துவங்குவோம் முதலில்
அனைவருக்கும் மே தின வாழ்த்துகள்


3 comments:

  1. உழைப்பின் பெருமையை உணர்த்திய வரிகள் அருமை! நன்றி!
    http://www.esseshadri.blogspot.com/2015/05/blog-post.html

    ReplyDelete
  2. "உடலுக்கும் உள்ளத்திற்கும்
    உழைப்பே மகிழ்வைத் தருமென்பதை
    உணரும் குழந்தைகளை உருவாக்குவோம்..." என்பதே
    இன்றைய தேவையும் கூட

    ReplyDelete
  3. உழைப்பாளர் தின நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே
    தம 1

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...