Saturday, 2 May 2015

மே மாத விடுமுறை

மே மாத விடுமுறை
------------------------------------------
எதிர் புறத்தில் புதிய வீட்டு வேலை நடக்கிறது.மதியம் கட்டிடத்தொழிலாளிகள் எங்கள் வீட்டின் முன் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து உணவு உண்ணுவார்கள்.ஒரு விடுமுறைநாளில் மதியம்  வெளியே வந்த போது சாப்பிட வாங்கம்மா என்றார்கள் .தூக்கு வாளியில் கஞ்சியும் ஊறுகாயும் இருந்தன.மனம் வருத்தமாயிருந்தது.அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டிருக்கலாமே என.வீட்டிலிருந்த இனிப்பை அவர்களுக்கு தந்தேன் மகிழ்வுடன் வாங்கிக்கொண்டனர்.


        இன்று   கட்டிட வேலை செய்பவர் தன் குட்டி மகளையும் அழைத்து வந்திருந்தார்.என்னடா பள்ளிக்கு போறியா என்றேன் .தலையாட்டி அங்கன் வாடி பள்ளிக்கு போறேன்னா.குவித்து வைக்கப்பட்டிருந்த ஜல்லிக்குவியலின் மேல் அமர்ந்து ஜல்லிகளைத் தூக்கிப்போட்டு விளையாடிக்கொண்டிருந்தாள்.என்னுடன் வர்றியா எனக்கேட்ட போது சற்று மிரட்சியுடன் தலையாட்டினாள்..எனது அகத்தாய்வு பயிற்சி வகுப்பு முடிந்து மாலை 6மணி அளவில் வந்த போது வேறொருக்குவியலில் அமர்ந்து தனியாக விளையாடிக்கொண்டிருந்தாள்.வீட்டிற்கு வாடா என்றேன்.மறுத்து தந்தையை நோக்கினாள் ,அவரோ நாளை கான்கிரீட் போடும் பணியில் மும்மரமாய்...

காலை முதல் மாலை வரை இந்தக்குழந்தையும் பணி புரியும் இடத்திலேயே.தனியாக..மே மாத லீவு அவளுக்கு இல்லாது இருந்திருக்கலாம்னு தோணுச்சு.

7 comments:

  1. வருத்தம்தான் சகோ.

    ReplyDelete
  2. வணக்கம்
    என்ன செய்வது... குலத்தொழில்.. வழி...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. மனதை பாதித்த பதிவு ...என்று மாறும் இந்த நிலை ?

    ReplyDelete
  4. பல குழந்தைகளின் நிலை இப்படித்தான் இருக்கிறது!

    ReplyDelete
  5. இதுவும் கற்றலே வாழ்வியல் திறன் கற்கிறார்கள். அதை அவனிடம சென்று பேசுங்கள். அனு.... வரதராஜன் இல்லை.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...