Tuesday, 28 April 2015

குழந்தையின் கனவாய்

அவசரமாய் பல்லு தேய்க்காம
அவதியா குளிக்காம
ஆற அமர சாப்பிட்டு
அம்மா காலை கட்டிக்கிட்டு
அப்பா கையப்பிடிச்சிகிட்டு
கடைக்கு போகலாமினி

இடிச்சிபிடிச்சி வண்டில பிதுங்கி
இயங்க மறுக்கும் பகல் சிறையில்லை
இன்னுமொரு திங்களுக்கு

ஆத்தா மடியில புதைஞ்சுக்கலாம்
தாத்தாவோடு விளையாடலாம்

வீட்டுப்பாடம் எழுதச்சொல்லி
அம்மா கொட்டு வைக்கலயே
அடுத்தவீட்டு பசங்களோடு
நாள்முழுதும் விளையாடலாம்னு
கனவுடனே எந்திரிச்சேன்

இந்திவகுப்பு
கம்ப்யூட்டர் வகுப்பு
சம்மர் கிளாஸ்னு கொல்லுறாங்க
கேட்க யாரும் மாட்டீங்களா?
நாங்களா  வாழ்வதுதான் எப்போது?



ம்னு

8 comments:

  1. அதானே.... கொடுமைதான். காலத்தின் கோலம்!

    ஒரு 'வ' அதிகமாய் இருக்கிறது! :))))))

    ReplyDelete
  2. வணக்கம்
    வரிகளை இரசித்தேன். அருமை
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. குழந்தைகள் எனது வீட்டில் அனுபவிகிறார்கள்

    ReplyDelete
  4. காப்பாற்ற யாரும் இல்லையா - பெற்றோர்களை...!

    ReplyDelete
  5. மாணவர்களின் நிலைமை மோசம்தான்
    ஆனாலும் காரணம் பெற்றோர்கள்தானே
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  6. விடுமுறைக்கு விடுமுறைவிட்ட பெற்றோர்களை என்ன செய்வது? பாவம் குழந்தைகள்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...