Monday, 27 April 2015

கறம்பக்குடி கலைஇரவு 25.4.15

கலைஇரவு கவிதைகள்
----------------------------------------
1]என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
முனகும் குரலில்
முதல்வர் நாற்காலி

2]சினிமாவில் பார்க்கத்தூண்டிய
   சிரிப்பழகியின் குழந்தைகள்
   சினிமாவே பார்ப்பது இல்லையாம்
   அவர்கள் தெளிவாக

3]விலையில்லாப்பொருட்கள்
   விலையில்லா உயிர்
   டாஸ்மார்க்

4]குளிர்விக்க வனமில்லை
  குடித்த நீரோ புகையாக
  புற்றுநோய் புவிக்கு

5]மீத்தேன் நிலம்
   நியூட்ரினோ மலை
  அணுக்கதிர் கடல்
  பணி அதிகம் தமிழகத்தில்
  எமனுக்கு

6]பெண்வழி வந்தவன்
   வந்த பாதையை என்ணியே
    வாழ்வைத்தொலைக்கின்றான்

7]மணலாடை அவிழ்த்து
  நீராடை அணிந்தாள் காவிரி
  துச்சாதனனாய் மேகதாது

8]அதிர்ச்சியில் தனியார் பள்ளிகள்
   அரசுப்பள்ளி மாணவருக்கே
  அரசு மருத்துவ,பொறியியல் கல்லூரிகளில்
 முன்னுரிமை அரசு உத்தரவு
  என் கனவில்




5 comments:

  1. அனைத்தும் அருமை! அதுவும் உங்கள் கனவு நன்றாகவே இருக்கிறது!

    ReplyDelete
  2. Unkalin ovvoru variyum mikavum arumai.Romba Nerthiyaaka irukku.naan unkal kavithaikalai share pannalaam?

    ReplyDelete
  3. Yatharthathai mika azhaga solli irukkenka

    ReplyDelete
  4. சமீபத்திய நிகழ்வுகளோடு அனைத்தும் அருமை...

    ReplyDelete
  5. வணக்கம்
    அனைத்தும் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
    எனது பக்கம் கவிதையாக வாருங்கள்.
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஈழம்...: ...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...