Saturday, 25 April 2015

கறம்பக்குடி கலைஇரவு 25.4.15






கறம்பக்குடி கலைஇரவு-25.4.15


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்-கறம்பக்குடி கிளை சார்பாக நேற்று நடந்த கலைஇரவு மிகச்சிறப்பாக நடந்தது.

மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் அருமை

நான்கு கால்களுடன் நடனமாடிய லிம்போகேசவன் கடைசியில் நெருப்பு நடனமும் ஆடி அசத்தியுள்ளார்.

காவடி ஆடியச்சிறுவனின் உடலெங்கும் காவடி அசைந்தாடியது அருமை.

மதுக்கூர் ராமலிங்கம் அவர்களின் பேச்சு நகைச்சுவையுடன் சிந்திக்க வைப்பதாகவும் அமைந்தது.

கவிஞர் தங்கம்மூர்த்தி அவர்களின் தலைமையில் நடந்த கவியரங்கம் செவிக்கு விருந்தென அமைந்தது.

புதுகை பூபாளன் குழுவினரின் நிகழ்ச்சி மற்றும் பல சிறப்பான நிகழ்வுகளுடன் கலை இரவு நடந்தது.

இத்தகைய ஆளுமைகள் நிறைந்த மேடையில் கவிதை வாசிக்க வாய்ப்பளித்ததோழர் ஸ்டாலின் மற்றும் கறம்பக்குடி தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றியும்.


4 comments:

  1. அருமையானதொரு விழா
    மகிழ்ந்தேன் சகோதரியாரே
    தம 1

    ReplyDelete
  2. வாழ்த்துகள் சகோ நலம்தானே.... தமிழ் மணம் 2

    ReplyDelete
  3. த,மு,எ,க,ச நடத்துகிற கலைஇலக்கிய இரவுகளுக்கு தனி வாசனை எப்பொழுதும் உண்டு.வாழ்த்துக்கள்/

    ReplyDelete
  4. கலங்குங்க அக்கா:))) வாழ்த்துகள்!!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...