Sunday, 12 April 2015

உயிர்த்துளி..

கும்மாளமிட்டு
குற்றாலக் குளியலெனக்
குளித்து மகிழ்ந்தது புதுகை

உடல் சிலிர்த்து
நனைத்து மகிழ்ந்தது தரு...

இட்டக் கோலத்தைக்
கலைத்து மகிழ்ந்தது விண்..

துள்ளாதே
நாசம் செய்த உன்னை
நனையவிட்டு நனையவிட்டு
காய வைத்து வறுத்தெடுப்பேன்
என உறுமியது இயற்கை

5 comments:

  1. புதுகையில் மழையோ... இங்கும் மேகமூட்டமாய்!

    ReplyDelete
  2. இங்கும் கொஞ்சம் அனுப்புங்க...

    ReplyDelete

  3. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் மேடம்!

    ReplyDelete
  4. அன்பு சகோதரி
    வணக்கம்!
    மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக!

    நித்திரையில் கண்ட கனவு
    சித்திரையில் பலிக்க வேண்டும்!
    முத்திரைபெறும் முழு ஆற்றல்
    முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


    மன்மத ஆண்டு மனதில்
    மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
    மங்கலத் திருநாள் வாழ்வில்!
    மாண்பினை சூட வேண்டும்!

    தொல்லை தரும் இன்னல்கள்
    தொலைதூரம் செல்ல வேண்டும்
    நிலையான செல்வம் யாவும்
    கலையாக செழித்தல் வேண்டும்!

    பொங்குக தமிழ் ஓசை
    தங்குக தரணி எங்கும்!
    சீர்மிகு சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக! வருகவே!

    புதுவை வேலு

    ReplyDelete
  5. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...