Thursday, 9 April 2015

என்ன செய்யப்போகின்றோம்....?

என்ன செய்யப்போகின்றோம்....?

ஒன்றும் புரியவில்லை ...சமூகச்சீர்கேட்டிலிருந்து குழந்தைகளைக்காக்கப் போராடிக்கொண்டிருக்கின்றோம்.ஏழாம் வகுப்பு ,எட்டாம் வகுப்பு குழந்தைகள் கூட காதல் மயக்கத்தில் வீழ்கின்றன என்ற உண்மை தீயாய்ச்சுடுகின்றது...

சினிமாவில் வருவதெல்லாம் உண்மை என்ற நினைவில் ஆழ்ந்து தங்கள் வாழ்க்கையை ஒன்பதாம் வகுப்பிலேயே துவங்க நினைக்கும் குழந்தைகளை எப்படிக்காப்பாற்றுவது...?

பள்ளிச்சீருடையில் காதலிப்பது போல் படமெடுக்கும் சமூக விரோதிகள் தங்கள் குழந்தைகள் இந்த வயதில் காதலித்தால் ஏற்றுக்கொள்வார்களா...?

குழந்தைகள் மனதை விடமாக்கும் போக்கை கண்டும் காணாமல் வாழப் பழகிக்கொள்ள வேண்டுமா..?

ஒரு பக்கம் கைக்குள் நீலப்படங்களைப்பார்த்து தானும் சீரழிந்து ,காமவெறியில் அலைந்து வயது வித்தியாசமின்றி பெண்களைச் சீரழிக்கும் கூட்டம்..

மற்றொரு பக்கம் பள்ளி வயது சிறுவர்களும் போதையில் வீழ்ந்து அழியும் சமூகம்..தான் குடிக்கும் போது மகிழும் ஆண்கள் தங்கள் குழந்தைகள் குடித்தாலும் மகிழ்ந்து குடிக்க ஆதரவு தருவார்களா..?

 பெண் குழந்தைகள் படித்து முன்னேறி வரும் சூழ்நிலையில் குழந்தைத்திருமணங்கள் மீண்டும் நடக்கத்துவங்கி விட்டன என்பது ,மறுக்கமுடியாத உண்மை...

ஆண்குழந்தைகளும் இதனால் பாதிக்கப்பட்டு  சீரழிகின்றன....வளரும் சமுதாயம் சீர்கெடும்படியான சமூகச்சூழ்நிலையை இனியும் அனுமதிக்கலாமா?

பெற்றோரும் கண்டிப்பதில்லை,,ஆசிரியரும் கண்டிக்கக் கூடாது என்றால் காட்டுச்செடியாய் மாணவர்கள் வளரவேண்டியது தானா..?

என்ன செய்யப்போகின்றொம் நாம்...?எந்தத்தலைவனும் அவதாரம் எடுத்து வரமாட்டான்.இன்று அடுத்தவர்களுக்கென்றால் நாளை நமக்கு...

பணமே குறிக்கோளாய் ஓடுபவர்கள் ஒரு நாள் தங்கள் குழந்தைகளை மீட்க முடியாமல் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்...

பெரியவர்களுக்கான இந்த சமுதாயம் குழந்தைகளை நினைக்கப்போவது எப்போது..?

குழந்தைகளுக்கான கல்வியில்லை...குழந்தைகள் நலமுடன் வாழ்வதற்கான சமூகமில்லை..

நாட்டுப்பற்று,மொழிப்பற்று ,இனப்பற்று எதுவும் இல்லாத தன்னலமான தலைமுறை உருவாகிக்கொண்டுள்ளது.

என்ன செய்யப்போகின்றோம்....?

8 comments:

  1. வணக்கம்
    விழிப்புணர்வு பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி யாவரும் அறிய வேண்டும... த.ம1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. குழந்தைகளை அதுவும் பெண் குழந்தைகளை வளர்ப்பது இன்றைய கால கட்டத்தில் பெரும் சவாலாகத்தான் தோன்றுகிறது.

    ReplyDelete
  3. காட்டுமரமாய் இருக்கும் பெற்றோர்கள் மாறினால் தான் வழியுண்டு...

    ReplyDelete
  4. தன்னலமான தலைமுறை எதிர்கொள்ளப்போகும் விளைவுகளை நினைத்துப் பார்க்கமுடியவில்லை.

    ReplyDelete
  5. இன்றைய தலைமுறையை நினைத்தால் ஒருபுறம் பெருமையாக இருந்தாலும் ஒருபுறம் இந்த மாதிரி அச்சம் ஏற்படத்தான் செய்கிறது!

    ReplyDelete
  6. அன்புள்ள சகோதரி,

    என்ன செய்யப்போகின்றோம்...காதல்...குடிப்பழக்கம்...கண்டிக்கப்படமுடியாத நிலையில் ஆசிரியரும்...பெற்றோரும்... நாட்டுப்பற்று,மொழிப்பற்று ,இனப்பற்று எதுவும் இல்லாத தன்னலமான தலைமுறை உருவாகிக்கொண்டுள்ள என்று தாங்கள் உரைப்பது உறைக்கட்டும் !

    சமுதாயம் இந்த அவலங்களின் கொடுமையிலிருந்து விலகட்டும்!

    நன்றி.
    த.ம. 4.

    ReplyDelete
  7. என்ன செய்யப் போகிறோம்?
    விடை தெரியா கேள்வி சகோதரியாரே
    தம +1

    ReplyDelete
  8. எல்லோர் மனதில் உள்ள ஆதங்கமும் இதுவே!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...