Sunday, 25 January 2015

என்ன செய்யப்போகின்றோம்..?

என்ன செய்யப்போகின்றோம்..?

விஜய் டி.வி நீயா?நானா?விவாத மேடையில்

நாம் வாழும் நிலம் வீணாகக்கூடாதே என்ற கவலையில் விவசாயிகளும்...நஞ்சானாலும் பி.டி விதைகள் சிறந்தவை என வாதாடுபவர்களைக்காண்கையில் விழித்துக்கொண்டே கிணற்றில் விழு எனக்கூறுவதாய் உள்ளது..

இன்னும் கொஞ்ச நாள் நம்மாழ்வார் வாழ்ந்திருக்கலாம்னு தோணுது...
விவசாயியின் கவலை நம் கவலையாக எப்போது மாறும்...?

உண்மை எளிமையாகவும் ,தீமை ஆடம்பரமாகவும் வீற்றிருந்ததைக்காண முடிந்தது.

இதன் ஒப்பீடாய் மனதிற்குள் மருத்துவம் பற்றிய சிந்தனையாய், சித்த மருத்துவம் பக்க விளைவுகளற்ற மருந்தினையும்,ஹோமியோபதி பக்க விளைவுகளைத்தரக்கூடிய மருந்தினையும் உள்ளடக்கிஉள்ளதையும்..நாம் சித்த மருத்துவத்தை ஒதுக்கிவிட்டு ஆங்கில மருத்துவத்தைப் பின்பற்றுவது, நமது பாரம்பரிய ஆரோக்கியத்தை நாம் இழந்து கொண்டிருப்பதை உணர்த்துகின்றன..என்பதையும் உணரமுடிந்தது..



10 comments:

  1. உண்மைதான் விவசாயம் இல்லையெனில் உலகமே இல்லை.

    ReplyDelete
  2. எல்லோருக்கும் இந்திய குடியரசு நாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. ஒரு பக்கம் வேதனையின் உண்மை...

    இன்னொரு பக்கம் ஆவணம் + ஆணவம்...

    ReplyDelete
  4. உண்மைதான் மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும் கீதா...

    ReplyDelete
  5. வணக்கம்
    சிறந்த பகிர்வு.. பகிர்வுக்கு நன்றி..
    இனிய குடியரசு தினவாழ்த்துக்கள் த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. வணக்கம்!

    "இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!"
    ஜெய் ஹிந்த்!

    நன்றியுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    (இன்றைய எனது பதிவு "இந்திய குடியரசு தினம்" கவிதை காண வாருங்களேன்)

    ReplyDelete
  7. விவசாய நிலங்கள் எல்லாம் காய்ந்து கிடக்கும் எங்கள் ஊரைப் பார்க்கும் போது மிகுந்த வருத்தமாக இருக்கிறது.

    ReplyDelete
  8. பழமையை பேசி வந்த
    உலகத்தில்
    பசுமையை பேசியவர்
    நம்மாழ்வார்!
    விவசாயத்தின் விசுவாசி/நேசன்!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...