Friday, 7 November 2014

இன்னும் எத்தனை மணி நேரம்..?

இன்னும் எத்தனை மணி நேரம்..?

இட்லிக்கான சண்டையில் ஒரு உயிர் ஊசலாடிக்கொண்டு.

.நான் நல்லா வந்துவிடுவேன்..மறுபடி தேர்வு எழுதுவேன் சிறப்பாக. என் ஆசிரியர் மிகவும் நல்லவர்..நான் அவசரப்பட்டு செய்துவிட்டதற்கு அவர் என்னை மன்னிக்க வேண்டும் என தீக்குளித்த குழந்தையின் புலம்பல்...இன்னும் எத்தனை மணி நேரங்களோ  தெரியவில்லை..

மூழ்கடிக்கும் பணிச்சுமையிலும் மனதை பிசையவைக்கின்றாள்..எப்போதும் புன்னகைப்பூக்கும் அவளின் தங்கையின் வேதனை நிறைந்த  முகத்தைக்காண முடியாமல் தவிர்க்கின்றேன்..விடாப்பிடியாய் மனதில் அமர்ந்து கொண்டு கலங்க வைக்கின்றாள்.
சென்ற மாதம் கல்லூரியில் நடந்த போட்டிக்கு அழைத்துச்சென்ற  குழந்தைகள் மூவரில் அவளும் ஒருத்தி...பேச்சுப்போட்டிக்குத் தயாராக வந்து மேல்நிலை மாணவிகள் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற நிலையில் அவள் பார்வையாளராக புன்னகைக்கும் முகத்துடன் என் அருகிலேயே..இருந்தாள்.அவளை மேலும் பட்டை தீட்டி சிறந்த பேச்சாளராக ஆக்க வேண்டும் என நானும் அவளின் ஆசிரியரும் கொண்ட கனவைச்சிதைத்து கரைந்து கொண்டுள்ளாள்..

 ...12 நாட்களாக அவள் படும் வேதனையைச் சொல்ல முடியாது கதறும் அவளின் அக்கா  இனி எப்படி இட்லியை பார்ப்பாள்...காலனின் தோற்றமாய் தெரியுமே..அவளுக்கு...பணிக்குச்செல்லும் அவசரத்தில் வாங்கி வைத்த இட்லியை சாப்பிட்டுச்சென்றதால் புரிந்து கொள்ளாத தங்கையின் முடிவு அந்த சகோதரிகளின் வாழ்வில் மிகப்பெரும் துயரமாய்...கணவனின் ஆதரவை இழந்த அந்த தாய் பெற்ற வயிறு தீயாய் எரிய தனது குழந்தை மீண்டு வருவாள் என்ற தீவிர நம்பிக்கையில்..

5 comments:

  1. மனம் கணக்கிறது இறைவன் நினைத்தால் ? நடக்கும் வேறு வழியில்லை தோழி

    ReplyDelete
  2. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
  3. உணவின் அரசியல் எப்படியெல்லாம் அலைகழிக்கிறது அக்கா:(((

    ReplyDelete
  4. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது...
    இறைவன் கருணை காட்டட்டும் சகோதரி.

    ReplyDelete
  5. வேதனை நிறைந்த பதிவு விரைவில் கருணை புரியட்டும் கடவுள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...