Monday, 20 October 2014

ஒரு கோப்பை மனிதம் -முன்னுரை

ஒரு கோப்பை மனிதம்-முன்னுரை
--------------------------------------------------------------
நூல் எழுதுவதை விட அந்நூலுக்கு தகுதியானவர்களிடமிருந்து முன்னுரை பெறுவது என்பது எவ்வளவு சிரமமான செயல் என்பது நூல் வெளியிட்ட அனைவருக்குமே தெரியும் ... எனது நூலை வலைப்பதிவர் சந்திப்பில் வெளிடலாம் என முடிவு எடுத்த போது குறுகிய காலங்களே என்னிடம்...

யாரிடம் பெறுவது என்ற ஆலோசனையில் என்னை இலக்கிய உலகில் வழிநடத்திச்செல்லும் அய்யா முத்துநிலவன் அவர்கள் வலைத்தளத்தில் கலக்கும் சகோதரி மைதிலி பற்றி கூறியவுடன் மிகவும் மகிழ்வாக இருந்தது..நான் இரண்டு நாட்களில் தரமுடியுமா எனக்கேட்ட பொழுது உடனே சரியெனக்கூறியதுடன் தன் பள்ளிப்பணி,குடும்பப்பணி,இணையப்பணி ஆகிய பணிச்சுமைகளுக்கிடையேயும் எனக்காக நேரம் ஒதுக்கி அழகான முன்னுரை எழுதித்தந்துள்ளார்

 தங்கை மைதிலி.http://makizhnirai.blogspot.com.மகிழ்நிறை என்ற இவரின் வலைத்தளம் வலைப்பதிவர்களிடம் மிகவும் புகழ் பெற்றது..நகைச்சுவையாக சிறந்த சிந்தனைகளை அள்ளித்தருவதில் அவருக்கு நிகர் அவரே..சிறந்த ஆசிரியர்..நல்ல பண்பாளர்.இந்த நேரத்தில் இவரை இந்நிலைக்கு கொண்டுவந்துள்ள..



 இவரது கணவரும் என் சகோதரருமான

திரு. கஸ்தூரிரங்கன் அவர்களுக்கு எனது பாராட்டுகளைக்கூறிக்கொள்கின்றேன்.இவரும் வலைப்பதிவரே இவரின் வலைத்தளமுகவரி மலர்தருhttp://www.malartharu.org இவரது தளம் அறிவியல் ,ஆங்கிலத்திரைப்படம்,தமிழ் .வரலாறு எனக்கதம்பமாக மிளிரும்..இந்த இணையப்புறாக்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி..

எனது நூலின் முன்னுரையாக..மைதிலியின் மடல்


ஒரு ஹூட் ஹூட் மழை நாளில்
புதுகை
எனது அன்பு கீதா அக்காவிற்கு,
 உங்களுக்கு ஒரு கடிதம் எழுதவேண்டும் என் நெடுநாள் ஆசை இன்றுதான் நிறைவேறியிருக்கிறது. நல்லவர்கள் நலமாகவே இருப்பார்கள்*(நிபந்தனைக்குட்பட்டது) எனவே விசயத்திற்கு வருகிறேன். உங்களிடம் நான் ஒரு அவசர ஆலோசனை செய்யவேண்டியிருக்கிறது.  ஆம்! உங்கள் கவிதைகளை உங்கள் வலைப்பதிவில் நித்தம் ரசித்துப் பருகிவரும் எனக்கு விதவிதமான பின்விளைவுகள் ஏற்படுகின்றன. அவை உடனடிப் புன்னகை, நீடித்த சிந்தனை எனப் பல வகைப்படுகின்றன. இதனை ஆராயும் பொருட்டு மீண்டும் உங்கள் கவிதைகளை படிக்கத் தொடங்கினேன். (இருநோக்கு அவளின் கண் உள எனும் திருக்குறள் நினைவுக்கு வருகிறதா?) பின்புதான் கண்டுபிடித்தேன். இந்தக் கவிதைகளைப் படைத்த உங்களுக்குள்ளும்  இருவேறு கீதாக்கள் இருக்கிறார்களோ? என ஐயமாக இருக்கிறது.

விதைச்சொல்

”மழையாகும்
அன்பில்
விதையாகும்
சொற்கள்”

எழுதியது தென்றல் கீதா

பேசுபொருளாய்

”ஆண்கள் புகழ்பெறின்
சேர்ந்தும்
பெண்கள் புகழ்பெற்றால்
சேர்த்தும்....”

எழுதியது வேலுநாச்சியார் கீதாவோ?

வருடல்

”அடிக்கடி தடவுகின்றது கை
மகனைச் சுமந்த வயிற்றை..
முதியோர் இல்ல மூதாட்டி”

தோட்டிச்சி பாட்டி, பட்டாசு கனவில், என மனம்வலிக்கச் செய்யும் கவிதைகள் கூடவே

முதுமை

”முதுமை
.........மை
இளமை”

வெட்கம் என நகைச்வையை இழையோட விடுவதுமாய் சொல்லொணா சுகம் தருகிறது உங்கள் தொகுப்பு.
இந்த மழைக்காற்றின் சாரலில் மற்றுமொருமுறை நனைய ஆவலாக இருக்கிறது மனம்.                    
மழைநனைந்த சிறகாய்
உங்கள் மைதிலி

என் மனம் நிறைந்த நன்றியுடன்

5 comments:

  1. படிக்கப் படிக்க கவிச் சாரலில் நனைய மனம் விரும்புகிறது
    சகோதரியாரே

    ReplyDelete
  2. வணக்கம்
    தங்களின் புத்தக வெளியீடு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. . முன்னுரை நம்ம அம்மு தான் எழுதியது என்றவுடன் ரொம்ப மகிழ்ச்சியாய் இருக்கிறது தோழி ! அவரைப் பற்றி சொல்வது நிஜம் தானே அவரது நட்பில் நிதமும் நான் மகிழ்வேன்.மிக்க நன்றி ! அன்பின் இதயங்கள் அருகினில் இருக்க புத்தக வெளியீட்டு விழா சிறப்ப்பாக நடந்தேறும்.
    ஜெயம் பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!
    தீபாவளி வாழ்த்துக்களும் உரித்தாடட்டும்.....!

    ReplyDelete
  4. அருமையான முன்னுரை. புத்தக வெளியீட்டிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. முன்னுரையில் மகள். தெளிவுரையில் சகோதரி. மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறேன் பருக.....

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...