Sunday, 27 July 2014

இப்படியும் சிலர்!



ஒரு மருத்துவமனை அங்கு நோயாளிகள் அன்புடன் கவனிக்கப்படுகின்றார்கள்....
மருத்துவருக்கு நோயாளி விரும்பும் தொகையை அங்கு வைக்கப் பட்டுள்ள தட்டில் போட்டுச் செல்லலாம்....சிலர் போட்டும் ,சிலர் அதிலிருந்து எடுத்துக் கொண்டும் செல்கின்றனர்....
தட்டு உண்டியலாக மாற்றி வைக்கப்படுகின்றது...இப்போதும் நோயாளியின் விருப்பமே மருத்துவச் செலவாய்...!
நம்பமுடிகின்றதா?
ஒரு மருத்துவர் தன் வீட்டிற்கு எட்டு வாசல் வைத்துக்கட்டுகின்றார்..காரணமாய் எட்டு திக்கிலிருந்தும் வரும் நோயாளிகளின் சிரமம் தவிர்க்கவே ....என்கிறார்...அவர் வீட்டு மாடியில் ஒரு போன் உள்ளது அதில் அவசரமாய் அழைத்தால் கீழே உள்ள மொபைல் மருத்துவ வண்டி புறப்படுகின்றது மருத்துவம் செய்ய...
ஆச்சரியமாய் உள்ளதா?வேறெங்கும் இல்லை நம் தமிழ் நாட்டில் தான் அதுவும் புதுக்கோட்டையில் திரு .ரெங்காச்சாரி மற்றும் குருசாமி முதலியார் ஆகிய மருத்துவர்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்றார்..நடமாடும் நூலகமாய் கருதப்படுகின்ற புதுக்கோட்டையில் நூல்களுக்காக வீடு கட்டி குழந்தைகளைப்போல் பராமரித்து வரும் மதிப்பிற்குரிய ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள்...

மருத்துவர் ஜெயராமன் அவர்களின் “மகனுக்கு மடல் “என்ற நூல் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாய் இன்று மாலை நடந்தது.

அதில் பேசிய ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பேச்சு தகவல் களஞ்சியமாய்.....கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல்...கடகடவென அரிய ,கேட்டிராத செய்திகளை அருவி போல கொட்டுகின்றார்...என்ன சொல்வது....மார்க்ஸின் கல்லறையைக் கண்டுபிடித்த நீரஜ் சவுத்ரி யின் வரலாற்றை கேட்ட பொழுது..மெய்சிலிர்த்தது...

புத்தகங்கள் உடனான வாழ்க்கை நம்மை விரிந்த உலகிற்கு அழைத்துச் செல்லும் என்பதற்கு உதாரணமாய் அவர் திகழ்கின்றார்...

காலையில் தேசியக்கவி வி.கே .கஸ்தூரிநாதன் அவர்களின்
”அட்சய பாத்திரத்தில் அழுக்கு படியாது “     என்ற நூல் வெளியீட்டு விழா மிக இனிய நிகழ்வாக நடந்தது...

இரு நூல்களும் சமூக சிந்தனையுடன் எழுதப்பட்டுள்ள நூல்கள் காலத்தை வென்று வாழட்டும்.....

4 comments:

  1. வியக்கவைத்த தகவல்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி கீதா. இப்படிப்பட்ட மனிதர்கள் வாழ்ந்த நாட்டில் நாமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று நினைக்கையில் பெருமையே.

    ReplyDelete
  2. திரு .ரெங்காச்சாரி மற்றும் குருசாமி முதலியார் போன்றவர்களை அதிசயப் பிறவிகளாகத்தான் கருத வேண்டும்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  3. சந்தோஷமான விசயம்.

    ReplyDelete
  4. மிக அருமையான தகவல் சகோதரி!

    பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்களும்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...