Friday, 25 July 2014

கடுதாசி வரக்காணலியே மச்சான்....!



கண்ணுமணி
பொண்ணுமணியா
வளந்த மவ,

சிட்டாப்பறந்த மவ
அரும்பரும்பா சிரிச்சு
ஆசையா வளந்த மவ.

,பள்ளிக்கூடம் போகையில
பஞ்சுமிட்டாய் வாங்கித்தர
அடம்பிடிச்சு அழுத மக

பெரியபடிப்பு படிக்க
பட்டனம்தான் போனாளே.....
வாராவாரம்  கடுதாசி
போடுவாளே...மச்சான்
இன்னும் வரக்காணலியே

பயலுவ கேலிக்கு
பயந்து பயந்து போனாளே
போமாட்டேன்னு சொன்னவள
கடுப்படிச்சு அனுப்புனியே...
சின்னமவ கேக்குறா
அக்கா எப்ப வருவான்னு?
கடுதாசி வரலியே....
காரணம்தான் தெரியலியே..

காக்கிச்சட்ட போட்டவக
உன்ன வந்து கேட்டதென்ன?
அவ போட்டா காட்டித்தேன்
விசாரிச்சதென்ன மச்சான்?
கண்ணுகலங்குறியே
கதறி துடிக்குறியே.....

கடுதாசி வரக்காணலியே மச்சான்னு
கேட்டதுக்கா சொல்லுமச்சான்...?

15 comments:

  1. புரிந்து விட்டது சகோதரி அந்த ஆசை மவளுக்கு என்னாயிற்றென்று....
    இதுதான் இன்றையநிலை.

    தற்போது எனது பதிவு ''விசித்திகன்''

    ReplyDelete
  2. வணக்கம்

    கவிதையின் வரிகளை இரசித்தேன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்

      Delete
  3. இன்றைய சமூக சூழலை சொன்ன கவிதை! அருமை!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சார்

      Delete
  4. செல் போன் வாங்கிக் கொடுத்தா,மக கெட்டு போயிடும்னு நினச்சு வாங்கித் தராத தாயின் புலமபலை படம் பிடித்து காட்டி விட்டீர்கள் !

    ReplyDelete
    Replies
    1. புலம்பல் நிற்கும் காலம் எதிர்பார்க்கிறேன் சார்.நன்றி

      Delete
  5. தாயின் உள்ளக் குமுறல்கள்
    அழகிய கவியாய்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ

      Delete

  6. வணக்கம்!

    பெண்ணின் நிலையெண்ணிப் பெற்றோர் துடிதுடிக்கக்
    கண்ணில் உடையும் கரை!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. பெண்ணின் நிலை மாறும் வரை தொடரும் நதியாய்...நன்றி சார்

      Delete
  7. இந்த தாய் மட்டுமல்ல பல தாய்மாரின் கண்ணீர்தானே இன்று வற்றாமல் ஓடுகிறது? நிலை மாறுமா தோழி?

    அருமை தோழி

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...