Sunday, 20 July 2014

தமிழன்னை தரும் சிறந்த தொலைக்காட்சி விருது...!?


விஜய் தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழா மிக அருமையாகக் காட்சிப்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளது...வாழ்த்துகள்

அடுத்த முறையாவது டிடியும் கோபிநாத்தும் தொகுத்து வழங்கும் போது ஒருவர் தூய தமிழிலும்,ஒருவர் தூய ஆங்கிலத்திலும் தங்கள் உரைகளை வழங்கினால் சிறந்த தமிழ்தொலைகாட்சி விருதை விஜய் தொலைக்காட்சிக்கு தமிழன்னை வழங்குவாள்....

எல்லாவற்றிலும் முதன்மையாக,சிறப்பாக விளங்கும் விஜய் தொலைக்காட்சி இதைக் கருத்தில் கொண்டால் பிற தொலைக்காட்சிகளும் பின்பற்ற வாய்ப்பு உள்ளது...

தாய்மொழிக்கு விஜய் தொலைக்காட்சி செய்யவேண்டிய கடமை அல்லவா..?செய்யுமா?


7 comments:

  1. நிச்சயமாக செய்யமாட்டார்கள் சகோதரி எல்லாமே வியாபாரம் காரணம் சுதந்திரதினத்தன்று தியாகிகளை அழைத்து கௌரவப்படுத்துவதில்லை, மாறாக விபச்சாரிகளை (நடிகைகளை) அழைத்து சுதந்திரத்தைப்பற்றி கேட்பார்கள் அவர்களுக்கு என்ன தெரியும் ?

    ReplyDelete
  2. விஜய் டிவி தமிழ் சேர்வது துர்லபமாச்சே. ஆங்கிலம் தானே ஆட்சி செய்யும்..நானும் யூடியூபில் வருகிறதா என்று பார்க்கிறேன். இவர்கள் எல்லோருக்கும் தமிழ்ப் பாடம் கட்டாயம் நடத்தவேண்டும்.

    ReplyDelete
  3. வணக்கம்
    சகோதரி.
    தாங்கள் சொல்வது உண்மைதான்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. நல்ல யோசனை சகோதரியாரே

    ReplyDelete
  5. தொலைக்காட்சிகளில் தமிழ்?! நல்ல தமிழ் பேசுவது மக்கள் தொலைக்காட்சி ஒன்றே! அது உங்கள் ஊரில் வருகிறதா?!

    ReplyDelete
  6. அருமையான ஆலோசனை
    http://www.malartharu.org/2012/12/blog-post_5724.html

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...