Tuesday, 3 June 2014

வாழ்த்துப்பா

திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக உலக சாதனைக்கவியரங்கத்தில் பணியாற்றிய புலவர் இராம.வேதநாயகம் அவர்களுக்கு எனது
” விழி தூவிய விதைகள்”
 நூலை நினைவாகத் தந்தேன் .

அந்நூல் படித்து அவர் எனக்கு எழுதி அனுப்பிய வாழ்த்துப்பா..

எண்சீர்

சமூகத்தின்           பார்வையினைக்
                               கொண்ட கீதா
                               சந்தனமாய் மணக்க ,கவி
                                மேலும்      தாதா  !

 இமயத்தின்          உச்சிவரை
                               புகழே செல்லும்
                               இன்கவிதை பென்ணுரிமை
                               பேசி வெல்லும் !

கமழ்கின்ற            தமிழன்னை
                               மடியில் நீயும்
                               கண்ணாகத் தவழ்ந்திடுவாய்
                               என்றும் சேயாய் !

சமைத்திட்ட         “விழிதூவி
                                யவிதை”     நூலே
                                சரித்திரத்தைப் படைத்திடும் உம்
                                ஆற்ற     லாலே !

பெண்ணிற்கு         விடுதலையே
                               கிடைக்க வேண்டிப்
                               பூரிப்பாய் பலகவிகள்
                                யாத்தே  உள்ளாய் !

மண்ணிற்கே          உம்போலக்
                                கவிஞர் தேவை
                                மாதர்நலன் காப்பதற்கு
                                மாதர்  தேவை !

உன்னாலும்            முடியுமென
                                அறிந்தேன் யானும்
                                  உள்ளன்பில் கவிதைமட்டும்
                                  இருக்கக் கண்டேன் !

பன்னாளும்           வாழியவே
                               கவியே கீதா
                              பல்லாண்டு பல்லாண்டு
                              தமிழாய் வாழி !
                         
மறக்காமல் நூலைப்படித்து எனை ஊக்கப்படுத்தி,வாழ்த்திய
 ”வெண்பா வேந்தர்”
புலவர் இராம.வேதநாயகம்,எம்.ஏ.,எம்.ஏ.,எம்.எட்.,அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்

6 comments:

  1. ஆஹா ! அருமையான படம் பூவுக்குள் ஒரு பிஞ்சு புதினம் பார்க்கிறது. வாழ்த்துப்பாவும் சிறப்பாகவே உள்ளது. நன்றி மேலும் இனியவற்றை படைக்க என் வாழ்த்துக்கள ....!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழி,மிக்க நன்றி.

      Delete
  2. படம் அருமை
    வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  3. வாழ்த்துப்பா - சிறப்புப்பா...

    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  4. "சமூகத்தின் பார்வையினைக் கொண்ட கீதா ; சந்தனமாய் மணக்க மேலும் கவி தாதா"...அருமையான வரிகள்! .சகோதரிக்கு என்னுடைய வாழ்த்துகளும்..!

    ReplyDelete
  5. புலவரின் கவிதையே படக்காட்சியாய் நிற்க,
    கவிதையின் பொருள்விளக்கமாய்ப் படம்நிற்க...
    இரண்டும் கவிஞர் கீதா (கவிதைக் குழந்தை?) எனக் காட்ட..
    அருமை கவிஞரே. கின்னஸில் இடம்பிடித்த கவிஞருக்கு ஒரு “ஓ“ போடுவோம்... வாழ்த்துகள்.. தொடரட்டும்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...