Tuesday, 17 June 2014

வாழையிலை

கண்கள் நிறைக்கும்
இளந்தளிர் பச்சை
செயற்கை வாழையிலை
அறுசுவை உணவுகள் தாங்கி...

அடுத்தது காட்டும் பளிங்காய்
நெகிழிக்குவளை நீர் சுமந்து...

வண்ணச்சித்திரங்கள் தாங்கிய
பிளாஸ்டிக் வட்டிகளில்
பால்பணியாரமும்
 பனிக்குழைவும்.....

குவிந்து கிடந்தன
உண்ணவும்...!
உண்ணப்பட்டும்...!

சுகாதாரத்துறை அதிகாரியின்
இல்லத்திருமணத்தில்...!

No comments:

Post a Comment

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...