Sunday, 8 June 2014

5] என் வண்ணத்தூறலில் ஐந்து


--------------------------------------------------------
காளையவன் கைபிடியில்
துவண்டு சரிந்து
தோளில் மாலையாகி
படர்ந்து பறக்கும் தருணம்
பட்டென்று நீர் தெளித்து
போதும் எழுந்திரென்றாள்
முதிர்கன்னியை...
வாழ்ந்து முடித்த தாய்....

கனவு வாழ்க்கை
 கானல் நீராய்
கண்ணில் முத்துக்களாய்
கடத்துகின்றாள் காலத்தை
கன்னிமகள்...

தனிநாடு விரும்பும்
ஈழப்பெண்ணாய்..

5 comments:

  1. ஈழப்பெண்ணின் கனவு நிறைவேறுமா?

    ReplyDelete
  2. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. முதிர்கன்னிகளின் நிலை வருந்துதற்குரியதுதான்

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரி
    காலம் காலமாய் காத்திருக்கும் முதிர்கன்னியின் கண்ணீர் துளிகள் இங்கு கவிதையாக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் கனவுகள் நனவாக எனது வேண்டுதலும் அவர்களுக்காக உண்டு. பகிர்வுக்கு நன்றீங்க சகோதரி.

    ReplyDelete
  5. முதிர் கன்னியின் கனவைக் கலைக்கும் தாய் ...அழகிய முரண்!
    ஈழத்துப் பிரச்சினையை முதிர் கன்னியின் நிலையோடு ஒப்புமை செய்தது அருமை..! வாழ்த்துகள்..!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...