Saturday, 29 March 2014

விண்மீன்

கங்குலில்
மொட்டை மாடியில்
மலரும் கனவுகளோடு
துயில் கொள்ளும் வேலையில்
கண்சிமிட்டி வம்பிழுத்தவர்களை
வலைவீசி பிடிக்க இயலாது
வாடிய என்னை

தேற்றும் விதமாய்
அத்துணை பேரையும்
புவியீர்ப்பு விசையென
கிளைதனில் ஈர்த்து
என் காலடியில்
காலையில் சமர்பித்தது
வேம்பு
பூக்களாய்...!

5 comments:

  1. அட அட..என்ன ஒரு கற்பனை..மிக அருமை கீதா..

    ReplyDelete
  2. வேப்பம் பூக்களின் வாசம் சிறப்பாக இருக்கும்! நட்சத்திரமாக கற்பனை செய்தது சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  3. காலடி விண்மீனாய் வேப்பம்பூ .அழகு!!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...