ஒன்றிணைந்து விடுங்கள் மாணவர்களே...
போராட்ட உணர்வு நீர்க்காமல் இருக்க...
அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்கள் தங்களை ஒன்றிணைத்து ஒரு அமைப்பு உருவாக்க வேண்டும்...உடனடியாக..
அதற்கு தலைமை தேவையில்லை பொறுப்பாளர்களே போதும்....
தமிழ்நாட்டின் உரிமைக்காக போராடும் உண்மையான அமைப்பாக சாதி,இன,மத,வேறுபாடில்லாத அமைப்பாக அது செயல்படவேண்டும்...
கட்சி,அரசியல்,நடிகர்கள் கலக்காத அமைப்பாக அது அமைவதே சிறப்பு..
எண்ணிக்கை முக்கியமல்ல..
நேர்மையானவர்களைக்கொண்டதாக அது உருவாகவேண்டும்...
கலைக்கும் சூழ்ச்சி துவங்கி விட்டது...
ஒன்றிணைந்து விடுங்கள் மாணவர்களே...
இனி உங்களை ஒன்றிணைய துரோகிகள் விடமாட்டார்கள்...
தமிழ்நாட்டையும்,தமிழனையும்,தமிழையும் காப்பாற்ற இனி யாரையும் நம்ப முடியாது..
மாணவர்களாகிய நீங்களே..காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை உருவாக்கிவிட்டீர்கள்...
ஐ.ஏ.எஸ் சகாயம் அவர்களிடம் ஆலோசனை கேளுங்கள்...அவர்களைப்போன்ற நல்ல உள்ளங்கள் உங்களை வழிநடத்துவார்கள்...
போராட்ட உணர்வை தேக்கி வையுங்கள்..
அது அடிக்கடி தேவைப்படும் நிலை தான் இன்று..
உங்கள் பகுதியில் நடக்கும் அநியாயங்களை பார்த்துக்கொண்டு சும்மா இருக்காதீர்கள்..
நியாயத்திற்காக உங்கள் குரல் எங்கும் ஒலிக்கட்டும்..
இனியாவது தமிழன் தமிழனாக வாழட்டும்..
நியாயத்திற்காக குரல் இனி ஓங்கி ஒலிக்கும்...
ReplyDeleteம்ம்ம்ம்.... என்ன சொல்ல.... இன்று மெரினாவில் நடப்பவை நன்றாக இல்லை.
ReplyDeleteசரியான நேரத்தில் சரியான அறிவுரைகளைப் பொறுப்புடன் கூறியுள்ளீர்கள்.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி.
தமிழன் தலைநிமிரட்டும்
ReplyDeleteமாணவர்கள் சரியான வழியில் சரியான திசையில் போராடுவது
தமிழன்என்ற வகையிலும் மேலும் ஆசிரியன் என்றவகையிலும்
என்னுள் பெருமிதத்தைஏற்படுத்துகிறது
மாணவர் போராட்டம் வெல்லட்டும்
சரியான கோரிக்கையை வைத்து இருக்கிறீர்கள் மாணவர்கள் போராட்டத்திற்கு மட்டுமல்ல நல்ல விஷயங்களுக்கும் ஒன்று கூடி இது போல தங்கள் சக்திகளை காட்ட வேண்டும் உதாரணமாக விடுமுறை நாட்களிலோ அல்லது வார இறுதி நாட்களிலோ தாங்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகே இருக்கும் குளங்களை தூர் வாரலாம் படிப்பில் கஷ்டப்படும் அரசு பள்லி மாணவர்களுக்கு பாடம் சொல்லி தரலாம் இது போன்ற நல்ல விஷயங்களை தொடர்ந்து செய்வதன் மூலம் அனைவரும் நெருக்கமான தொடர்பில் இருக்கலாம் அப்படி நெருக்கமாக இருப்பதால் சமுகப் பிரச்சனைகள் என்ரு வரும் போது மிக வேகமாக ஒன்று கூடி தீவிர போராட்டங்களில் கலந்து வெற்றியை எளிதில் தட்டி பறிக்கலாம்
ReplyDelete