Saturday 20 August 2016

பெண்ணின் பெருமைகளாய் சாக்‌ஷி ,சிந்து


நொடிப்பொழுதும் சுமந்தே திரிந்து
நொந்து போன பெண்களுக்கு
ஒலிம்பிக்கில் எடை பெரிதல்ல...

துன்பங்களை சிறகுகளாக்கி
பறக்கத்துடிக்கின்றவர்களுக்கு
சிறகுப்பந்து எட்டாக்கனியல்ல..

விட்டுவிடுங்கள் அவர்களை
எல்லோரும் சாதனையாளர்களாவார்கள்..

பெண்குலத்திற்கு பெருமை சேர்த்த
சாக்‌ஷி ,சிந்துவை பாராட்டி மகிழ்கின்றோம்..

உடலை மறந்து
திறமையைப்பாராட்டிக்கொண்டே இருக்கும்
ஆண்களை வணங்குகின்றோம்..

13 comments:

  1. சாதனைப் பெண்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. வெற்றிபெற்ற இந்த இரு வீராங்கனைகளையும் போற்றி மகிழ்கிறோம்.

    கருத்தாழம் மிக்க தங்களின் கவிதை வரிகளையும் நான் வணங்கி மகிழ்கிறேன்.

    பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சார்....உங்களின் பாராட்டுகள் என்னை மேலும் மெருகேற்றுகின்றன மிக்க நன்றியும் அன்பும்..

      Delete
  3. சாதனைப் பெண்களுக்கு வாழ்த்துக்கள்...
    அழகிய கவிதை அக்கா....

    ReplyDelete
  4. “சோதனை”யின் கொம்புகளை ஒடித்து, சாதனை படைத்த வீரமகள்கள் இருவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். (முன்னர் ஒரு ஒலிம்பிக்ஸில் அத்தனை ஆண்பிள்ளைகள் போயும் ஒத்தை ஆளாக கர்ணம் மல்லேஸ்வரி வலுத்தூக்கும் போட்டியில் பதக்கம் பெற்றுவந்ததை நான் ரொம்பநாள், “அவர் தூக்கியது இந்தியாவின் மானத்தை” என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தேன். இப்போது 118பேர் சென்ற பயணத்தில் இரண்டு வீராங்கனைகள்... இவர்களை வாழ்த்துவது ஆண்களின் கடமை! இனிமேலாவது பெண்களை வெறும் சதைப் பிண்டங்களாகப் பார்க்கும் பார்வை மாறட்டும். மாறும். மாற்றுவோம். சரியான நேரத்தில் சரியான பதிவுக்கு நன்றிம்மா.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அண்ணா.

      Delete
    2. பெண்ணின் பெருமைக்கு சாட்சி - சிந்து-சாட்சி! (கவிதைப் பதிவுக்கு நாங்களும் கவிதையிலேயே பின்னூட்டமிடணும்ல?)

      Delete
  5. சாக்‌ஷி, சிந்து இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. ஒலிம்பிக்கில் பெண்களின் கை ஓங்கி வருவது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் :)

    ReplyDelete
  7. சாக்‌ஷி, சிந்து, இருவருக்கும் வாழ்த்துக்கள்.
    மற்றும் பதக்கத்தை நூலிழையில் தவறவிட்ட ,
    தீபா விற்கும் வாழ்த்துக்கள்.
    தீபாவின் திறமை , சாதனை சாதரணமானது அல்ல !

    ReplyDelete
  8. பாராஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற தீபா மாலிக்கையும் சேர்த்துக்கொள்ளுங்கள் மேடம். சிந்துவுக்கும், ஷாக்‌ஷிக்கும் கொடுக்கும் அதே கௌரவத்தை/அங்கீகாரத்தை இவருக்கும் கொடுப்போம். என் கருத்தில் தவறிருந்தால் மன்னிக்கவும்.

    விஜயன்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...