ஜோக்கர்.-தமிழ்த்திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்.
வாழ்த்துகள் ராஜூ முருகன் சார்.
இத்தனை பச்சையாக நாட்டை தோலுரித்துக்காட்ட முடியுமா?கைதட்டிக்கொண்டே இருக்க வைத்த நச் வசனங்கள்.
கதாநாயகன் என்று யாராவது வருவார்களே என பொதுப்புத்தியோடு இருந்த எனக்கு, ஜனாதிபதியாக தன்னை எண்ணி வாழ்கின்ற சோமசுந்தரத்தின் வாழ்க்கையோடு நானும் இணைந்தேன்....
சமூக அக்கறை உள்ளவர்கள் காசு கொடுத்து திரையரங்கில் பார்த்தால் அதில் வரும் பணத்தைக்கொண்டு கழிப்பறை கட்டித்தரப்போகிறோம் என்று இப்படத்தை தயாரித்தவர்களால் மட்டுமே கூற முடியும்.
நாட்டின் சீர்கேடுகளைத் தட்டிக்கேட்பவனை ஜோக்கராகத்தான் பார்க்கிறது கோமாளிக்கூட்டமான இந்த சமூகம்...
மன்னர்மன்னாக நடித்த சோமசுந்தரத்தின் நடிப்பு அட்டகாசம். பார்வையிலேயே கழிப்பறை மேல் உள்ள காதலைக்காட்டும் மல்லிகாவான ரம்யா பாண்டியன் பேசாமலே பேச வைக்கின்றார். பொன்னூஞ்சலாக நடித்த ராமசாமியும்,இசையாக நடித்தவரும் மிக அருமையாக வாழ்ந்துள்ளனர்.
பெண்கள் சுதந்திர இந்தியாவில் கழிப்பறைக்காக படும் பாடு....டிஜிட்டல் இந்தியாவின் முகத்திரை..
பள்ளியில் ...ஓடும் பேரூந்தில்...பணிபுரியும் இடத்தில் என எல்லா இடங்களிலும் அடக்கி அடக்கியே அடங்குகின்றோம்..
சமூக அக்கறை உள்ளவரால் மட்டுமே காசுக்கு விலை போகாமல் இப்படிப்பட்ட திரைப்படத்தை எடுக்க முடியும்...
நாட்டிற்கு உண்மையான தேவை எது என அறிந்து அதை திரைக்கதையாக்கி தந்த ராஜூமுருகன் மற்றும் அவரது குழுவினருக்கு மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்..

நல்லதொரு பகிர்வு. பார்க்க நினைத்திருக்கும் படங்களில் இதுவும் சேர்த்திருக்கிறேன்.
ReplyDeleteவணக்கம் சகோ.அவசியம் பாருங்க...அருமையான படம்.
Deleteவணக்கம் சகோ.அவசியம் பாருங்க...அருமையான படம்.
Deleteநல்ல விமர்சனம், நான் இரண்டாவது நாளே பாத்துட்டேன் சகோதரி, சமூக அக்கறையுள்ள எனக்கு பிடித்த படம்.
ReplyDeleteநன்றி சகோ
Deletehttps://www.facebook.com/lalgudimurali/posts/10208895902608987
ReplyDeleteநன்றி சார்
Delete