எங்கள வாழ விடுங்கடா
இப்பதாண்டா கல்வி கிடைச்சு மேல வர்றோம்
இன்னும் சுதந்திரமா பேச முடியலடா
இன்னும் அண்ணன் தம்பிக்குதாண்டா முன்னுரிமை
இன்னும் வேலை பார்த்தும் அப்பா அம்மாக்கு உதவமுடியலடா
இன்னும் இரவுகளில் மட்டும்ல பகல்ல கூட தனியா நடக்கமுடியலடா
காதலிக்க தெரியாம இல்ல..ஆனா
எங்க அப்பாஅம்மாவ காப்பத்தனும்டா
அதுக்குள்ள கட்டையால அடிச்சு
கத்தியால வெட்டி சாகடிக்குறீங்களே
உங்களுக்கு என்னடா பாவம் செய்தோம்
இதக்காரணம் காட்டி பொம்பளபுள்ளகல மறுபடி வீட்டுக்குள்ள முடக்கி போட்டுடுவாங்க பாவிகளா
உன் காதலுக்கு தீனியா எங்க உயிராடா நாய்களா...நாய் கூட பிடிக்கலன்னா தொட மாட்டேங்குதுடா ..
வெறி புடிச்ச காமாந்தகா...
எப்படிடா உங்கள சமாளிக்கிறது....
அவ ஆடை சரியில்ல அதான்னு சொல்றவங்க இதுக்கெல்லாம் என்ன சப்பை கட்டு கட்டுவாங்க...
அனைத்தும் மனதை நெகிழ வைத்த வரிகள்.. இந்த மாதிரி செய்திகளை கேள்விபடும் போது இது தமிழகத்தில் தினசரி நடக்கும் செயல்போலத்தான் மனதிற்கு பட்டது ஆனால் உங்களின் இந்த பதிவை படித்ததும் மனதிற்கு மிகவும் சஞ்சலமாக இருக்கிறது ஏன் நம் சமுகம் மிகவும் மோசமாக போய்க் கொண்டிருக்கிறது... என்னை பொறுத்தவரை தமிழ் திரைப்படங்களின் தாக்கம்தான் நம் சமுகத்டை இப்படி கொண்டு போய் கொண்டிருக்கிறது என நினைக்கிறேன்
ReplyDeleteஉங்கள் உள்ளக்குமறலை நாலு பேருக்கு உரைக்குமாறு சொன்ன உங்களுக்கு பாராட்டுக்கள்
மனதை கவ்வுகின்றது சோகம் ..பெண் குழந்தைகள் கூட வீட்டில் வாழ முடியாத சமூகம்...எதுவும் செய்ய முடியாத கையறு நிலை...முடியல சார்.
Deleteநமது நட்புக்களை தவிர மேலும் பலர் படிக்க எனது தளத்தில் இதை மறுபதிவு செய்ய அனுமதிகிடைக்குமா?
ReplyDeleteகேட்க வேண்டாம் சார் ..பதிவு செய்து கொள்ளுங்கள்...கொஞ்சமாவது எல்லோரும் உணரட்டும்..நன்றி
Deleteபெண் முதல்வர் இருந்தும் இதெல்லாம் நடக்கிறது என்றால், பெண்கள் ஆண்களை மட்டும் குறை கூற முடியாது சகோதரி.
ReplyDeleteயாரை சொல்றதுன்னு தெரியல..போங்க..
Deleteகொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா ,அங்கேயும் தலை முடியை வெட்டிட்டு போறானுங்க ,பள்ளிக்கு வந்தா தலையையே வெட்டுறீங்களே !ஏண்டா ,இப்படி காமாந்த வெறி பிடிச்சி அலையுறீங்க ?
ReplyDeleteவெளிப்படையா சொல்லனும்னா பயமா இருக்கு வாழ...சகோ...
Deleteவேதனை
ReplyDeleteவலி தாங்க முடியவில்லை. மனதை உலுக்கும்/அறுக்கும் வரிகள். பெண்கள் வெளியில் செல்லவே பயப்படும் நிலை. காரணங்கள் பல.
ReplyDeleteநம்முடைய வீடுகள் சரியில்லை. சுய ஒழுக்கமும் கட்டுப்பாடும் பிறரை மதிக்கும் பண்பும் இல்லை அல்லது சொல்லித்தரப் படுவது இல்லை.
பெண்களை உடம்பாகவே பார்க்க சமூகமும் திரையும் சொல்லிக்கொடுக்கின்றன. பெண்கள் மீண்டும் வீட்டுக்குள் முடங்கும் அவல நிலை. தனுஷ்களும் சிம்புகளும் சிவகார்த்திகேயன்களும் சந்தோஷப்படட்டும்.
விஜயன்.
இதே போன்று இன்னொரு பதிவு
ReplyDeletehttp://naanselva.blogspot.com/2016/08/blog-post_31.html
பெண்கள் மீதான தாக்குதல் தொடர்வது கவலை அளிக்கிறது! ஆதங்கமான பதிவு! நன்றி!
ReplyDeleteகொடுமைதான், இந்தக் கேடுகெட்ட சமூகத்தில் நாமும் வாழ்கிறோமே என்று வெட்கமும் வேதனையும் மேலெழுகிறது தங்கையே! உள்ளக் குமுறலைக் கொட்டித் தீர்த்திருக்கிறீர்கள்... ஆனால் நல்லா யோசிச்சுப் பாருங்க... அவர்கள் இதையே கவிதையாய், காவியமாய், புராணமாய், பொய்ச் சடங்குகளாய்... எவ்வளவு நைச்சியமாகச் செய்கிறார்கள்...! நாம் இன்னும் கூர்மைமிக்க கலைகளைக் கற்றுக்கொண்டு திருப்பியடிக்க வேண்டும் மா! வெறும் கோபம் போதாது அந்தக் கயவாளிக் கலையாளிகளுக்கு! என்றாலும் உங்கள் கோபத்தின் வெப்பத்தை உணர்கிறேன்.
ReplyDeleteவலி நிறைந்த உண்மை வரிகள் !
ReplyDeleteதான் ஒரு பெண்ணை விரும்பினால் அந்த பெண் தன்னை கட்டாயம் ஏற்றே ஆக வேண்டும் என்ற கொடிய ஆணாதிக்க சிந்தனையின் வெளிபாடுகளே இந்த கொடுமைகள். இந்த சிந்தனை ஏற்படுவதற்கு அம்மா, அப்பா, சமூகம், சினிமா காரணம். தமிழ் சினிமா நான் பார்ப்பது மிக குறைவு என்பதால் எனக்கு தெரியவில்லை, ஹீரோ தான் விரும்பிய பெண்ணை துரத்தி துன்புறுத்தி காதலிப்பாராம், இறுதியில் அந்த பெண் ஹீரோவை உருகி காதலிப்பாராம். இப்படி தான் பல தமிழ்படங்கள் எடுக்கபடுவதாக சினிமா நிறைய பார்க்கும் நண்பர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
ReplyDeleteவலி நிறைந்த வரிகள்.... இங்கே வளர்ப்பு சரியில்லை. ஆண்களுக்கு சமுதாயமும், சினிமாவும் பெண்களை காமப் பொருளாகவே பார்க்கச் சொல்லித் தருகிறது. தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இந்த கேவலை நிலை தான். வெளியே வராத பல கொடுமைகள் வட நாட்டில் தினம் தினம் நடந்து கொண்டிருக்கிறது.....
ReplyDeleteபடிக்கும்போதே கஷ்டமாக இருக்கிறது. என்ன சொல்ல....