மறக்க முடியாத நாளாக..
இன்று குழந்தைகளின் கண்களில் அப்படி ஒரு மகிழ்வைக் கண்டேன்.
சிலவருடங்களாக சுட்டி விகடன்,சிறுவர் மணி,இந்து வின் மாயாபஜார்...என குழந்தைகளுக்காக சேர்த்து வைத்த நூல்கள் ,இன்று குழந்தைகளின் கைகளில் நூலகப்பிரிவேளையில் தந்தேன்..
அத்தனை ஆசையாக ஓடி வந்து வாங்கியக் காட்சியைக்கண்ட பொழுது குழந்தைகள் படிக்க விரும்புகின்றனர் பாடத்தை விட ...அவர்களுக்கு சுவாரஸ்யமான புத்தகங்களை நேசிக்கின்றனர் என்பதை உணர்ந்தேன்.
அம்மா இதுல குறுக்கெழுத்து எழுதலாமா?
அம்மா இந்த படத்தை வரையலாமா?
அம்மா..புள்ளி புள்ளியா இருக்கே இத பென்சிலால இணைக்கலாமா?ன்னு ஒரே கேள்விகள் மயம் ..
ஒருத்தி கலர் கொடுக்கத்துவங்க ..நீ என்ன படிச்சேன்னு கேட்பேனே..உனக்கு புடிச்சத குறிப்பு எடுத்துக்கிட்டு ,கலர் கொடேன்மா என்றதும் வேகமாகக் குறிப்பு எடுக்கத்துவங்கினாள்.
இது உங்களுக்காக தந்த புத்தகம் எது வேணாலும் பண்ணலாம் ஆனா புத்தகம் வீணாகப்போகக்கூடாது என்றேன்... அத்தனை மகிழ்வாய்த் தலையாட்டி
ஒவ்வொருவரும் புத்தகத்திற்குள் கலந்து மறைந்ததைக்கண்ட போது எல்லையில்லா மகிழ்ச்சி...
நாளை பாடக்கேள்விகள் எழுதிக்காட்டுனா மறுபடியும் தரேன்னு வாங்கி வச்சுருக்கேன்...
என் வேலையையும் கொஞ்சம் பார்க்கனும்ல..

அருமையான பதிவு
ReplyDeleteகருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html
மிக்க நன்றி அவசியம் வருகின்றேன் சார்.
Deletewow. lovely moment. anything other than school text book always interesting. why ???
ReplyDeleteநல்ல செயல் கீதா சகோ! அருமை. தொடருங்கள்!
ReplyDeleteநன்றி சகோ....புத்தகம் படிக்கும் ஆசையைத் தூண்டி விட்டால்..அவர்களே படித்துக்கொள்வார்கள்...அல்லவா.
Deleteஅருமை
ReplyDeleteநன்றி பா.
Deleteஉங்கள் நல்ல பணி தொடர வாழ்த்துகள்!!! அவர்களின் எதிர்காலத்துக்கு தங்களின் சிறிய பங்களிப்பாயினும் மிகப்பெரிய தாக்கத்தை தரவல்லது.
ReplyDeleteஉண்மைதான்..நமக்கு எல்லாம் அம்புலிமாமா,பாலமித்ரா கிடைத்தது..இவர்களுக்கு டி.வி யக்காட்டி கெடுத்துவிட்டோம்..
Deleteநான் பணியிலிருந்த காலத்து -தினமணி- சிறுவர் மணிகளை எட்டாம்வகுப்பு மாணவர்க்குக் கொடுத்துவந்தேன். பிறகு பள்ளி நூலகங்களில் போட்டுவந்தேன். இப்பச் சேர்ந்திருப்பவற்றை உங்கள் பிள்ளைகளுக்குத் தரவா? எடுத்து வைத்திருக்கிறேன்... நாம “ஒரே” பள்ளிக்கூடம்தானே?
ReplyDeleteகட்டாயம் தாங்க அண்ணா...ரொம்ப விரும்பி படிக்கிறாங்க...ஒரே பள்ளிக்கூடம் என்பதில் என்ன சந்தேகம் அண்ணா...
Deleteநல்லதொரு செயல்..... பாராட்டுகள்.
ReplyDeleteபாடப்புத்தகங்களோடு இப்படி படிக்கக் கொடுக்கும்போது படிக்கும் ஆர்வம் அவர்களுக்கு வருமே.... நல்ல விஷயம்.