Saturday 25 June 2016

இறத்தல் எளிது.

மனக்குகையில் பயப்பறவைகளின்
சிறகசைப்புகள் நிர்பயாக்களையும்
வினோதாக்களையும் நினைவுறுத்தி
முற்றுபெறாதென ஸ்வாதியும் 
தொடர்கதையாகுமென சத்தமிடுகின்றன.....

 ஒளிந்து கொள்ள தோணுகிறது
ஒழியாத வன்முறையால்..
எங்கோ நடக்கிறதென்றும்
எவருக்கோ என்றும்
 சும்மாயிருக்க முடியவில்லை.
 பிறத்தலை விட
இறத்தல் எளிதாயுள்ளது...
கூலிகளால்...
வாழ்வு அச்சங்களால்
நகர்த்தப்படுகின்றது..

6 comments:

  1. நடைமுறை உண்மைகள்...

    ReplyDelete
  2. செய்தியைக் கேள்விப்பட்டதும் மனம் பதறியது. இன்னும் இன்னும் எத்தனை கவிதைகள் எழுத வேண்டுமோ?

    ReplyDelete
  3. கசப்பான நிகழ்வுகள்...... :( இன்னும் எத்தனை பேரை இழக்கப் போகிறோம்.... கொடூரச் செயல்களுக்கு....

    ReplyDelete
  4. இறத்தல் எளிது
    எதையோ சொல்லப் போகிறீர்
    என ஆவலுடன் தேடினேன்
    முயன்று உட்புகுந்தேன்

    கடைசியில் மிருகங்களின் கொடுமை
    பற்றி புகன்றுள்ளீர்.

    அந்த இறத்தல் என்பது எளிதல்ல‌
    இறந்தவர் சொன்னால்தான் தெரியும்...
    அப்படிப்பட்ட இறப்புகள் மலிவு என்று
    சொல்லியிருக்கலாமோ
    அது பொருந்துமோ எனத்தோன்றுகிறது

    இறத்தல் எளிது
    என்ற வார்த்தை மூலம்
    மிகவும் அர்த்தப் பெருவெளியை
    எதிர்பார்த்தேன்

    பிறத்தலை விட‌
    இறத்தல் எளிதாயுள்ளது
    என்ற அந்த இடத்தில் மட்டுமே
    சிறு சறுக்கலாயுள்ள கவிதை

    மற்றபடி வெளிப்பாடு அருமை.
    குரல் மேலும் ஒலிக்கட்டும்
    வன்முறையை ஒடுக்கட்டும்..

    அவர்கள் எல்லாம் படிக்கிறார்களா என்ன?

    ReplyDelete
  5. மனம் வேதனையுறுகிறது. இந்த மாதிரி நிகழ்வுகளுக்கு முடிவே இல்லையா..கொடூரம் கொடூரம்

    ReplyDelete
  6. இன்னும் நாம் எவ்வளவு முறைதான் வெட்கப்பட்டுக்கொண்டும், வேதனைப்பட்டுக்கொண்டும் இருக்கப்போகிறோமோ?

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...