மகளிர் தினத்தில் மாணவிகளுடன்
இன்று என் மாணவிகளிடம் மகளிர்தினம் குறித்த விழிப்புணர்வு பற்றி பேசினேன்...
விளம்பரங்களில் செண்ட் அடித்த ஆணைச்சுற்றும் பெண்களா நீங்கள்..? அரைகுறை ஆடையணிந்து வலம் வரும் கதாநாயகிகளுக்கு பின் உள்ள வேதனை அளவிட முடியாதது .. அவர்களைப்போல் அலங்கரித்து கொண்டு ஆண்களை பின்னே அலையவைக்க பிறந்தவர்களா நீங்கள்?
பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் அழகு சாதனப்பொருட்களை விற்க தந்திரமாக தொடர்ந்து உலக அழகிப்பட்டம் இந்தியப்பெண்களுக்கு கொடுத்த இந்திய பெண்களை அழகு நோக்கி ஓடவைத்த கொடுமை அறிந்தவர்களா நீங்கள்?
மாற்றவே முடியாத தோலின் நிறத்தை ஒரே வாரத்தில் மாற்றிவிடுமென ஏமாற்றும் கிரீம்களை நம்புபவர்களா நீங்கள்?
ஓட்டுரிமைக்காக,சமத்துவ கூலிக்காக,பணி நேர அமைவிற்காக சாலையில் இறங்கி போராடிய ஐரோப்பிய பெண்களின் வேதனை வலி உணர்ந்தவர்களா நீங்கள்?
உடன்கட்டை ஏறுதல்,சிசுக்கொலை,குழந்தைத்திருமணம்,கைம்பெண் கொடுமை ஆகிய முட்கள் நிறைந்த பெண்ணினப்பாதையை உணர்ந்தவர்களா நீங்கள்?
கல்வியை கடினமாக நினைக்கும் நீங்கள் பிறந்த ஊரில் தான் முதல்பெண் மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டி படிக்க பட்ட சிரமங்களை அறிந்தவர்களா நீங்கள்?
நீங்கள் தெளிவடைக்கூடாதென்பதற்காக ,கல்வியினால் சிறப்படையக்கூடாதென்பதற்காக,பொருளாதாரச்சுதந்திரம் அடைந்து விடக்கூடாதென்பதற்காக பள்ளிப்பருவத்திலேயே காதல் என்ற பெயரில் ஆண்களை நோக்கி ஓட வைக்கும் குள்ளநரித்தனம் உணர்ந்தவர்களா நீங்கள்?
பாடநூல் எழுதப்படிக்க மட்டுமே கற்றுக்கொடுக்கும்,வாழ்க்கையை முழுமையாகப்படிக்க ,சாதனையாளர்களின் நூல்களைப்பற்றி அறிந்தவர்களா நீங்கள்?
பிறந்த குழந்தை முதல் பாட்டி வரை பாலியல் வன்முறைக்கு ஆளாகி சிதைந்து போவதை உணர்ந்தவர்களா நீங்கள்?
உலகின் சரிபாதி பெண்கள் சமூக அக்கறையின்றி இருக்கும் போது எப்படி நாட்டில் முன்னேற்றம் வரும்.?
ஆணுக்கு இணையாக அத்தனை வேலைகளையும் செய்ய உடலினை உறுதி செய்யுங்கள்.
பெற்றோர்களை,நாட்டைக்காக்கும் பொறுப்பு உங்களுக்கும் உண்டென்பதை உணருங்கள்.
எல்லாவற்றிற்கும் கற்கும் கல்வியே துணை என்பதை உணருங்கள். சகப்பெண்கள் பாதிக்கப்படுகையில் ஒன்றிணைந்து தட்டிக்கேளுங்கள்.
உங்களால் முடியாதது எதுவுமில்லை...
நூலகம் வேண்டுமென்று விண்ணப்பித்த எட்டாம் வகுப்பு மாணவி தன் ஊருக்கு நூலகத்திற்கு சொந்தமாக கட்டிடம் வரக்காரணமாகயிருக்கின்றாள்...
நம்மால் நம் ஊருக்கு என்ன நல்லது செய்ய முடியுமென்று யோசியுங்கள்.. \
நாட்டில் அரசியல் சாக்கடை என்று கூறுபவர்கள் முன் அதை சுத்தம் செய்யக்களம் இறங்கும் அரசியல்வாதியாக மாறுங்கள்.
உங்களை சேர்ந்த பெண்களை விழிப்புணர்வு பெற நீங்கள் உதவுங்கள்...
தன்னம்பிக்கையுடம் செய்கின்றோம் அம்மா என்ற போது மனதிற்கு நிறைவாக இருந்தது...

நல்ல அறிவுரை கீதா..வாழ்த்துகள் :)
ReplyDeleteநன்றிமா
Deleteசிறப்பான அறிவுரை. பாராட்டுகள்.
ReplyDeleteமகளிர் தின நல்வாழ்த்துகள்.
நன்றி சார்..முடிந்தவரை முயற்சிக்கின்றேன்..
Deleteஅருமை
ReplyDeleteநன்றி அண்ணா..
Deleteஅக்கா அருமையான அறிவுரைகள்
ReplyDeleteவாழ்த்துக்கள் ....
This comment has been removed by the author.
Deleteநன்றி சகோ..
Deleteநல்லாசிரியை ....
ReplyDeleteஇதில் ஏதும் வஞ்சப்புகழ்ச்சி இல்லையே
Deleteஅறிவுரைகள் நன்று சகோ வாழ்த்துகள்
ReplyDeleteதங்களை அறிமுகப்படுத்திய பதிவின் இணைப்பு காண....
http://www.killergee.blogspot.ae/2016/03/blog-post.html
//மாற்றவே முடியாத தோலின் நிறத்தை ஒரே வாரத்தில் மாற்றிவிடுமென ஏமாற்றும் கிரீம்களை நம்புபவர்களா நீங்கள்?// இதையெல்லாம் சொன்னா கேக்குறாங்களா சகோ ?
ReplyDelete