Sunday 6 March 2016

மகளிர் தினம்1-2016

மகளிர் தினம் -------------------------------
 புதுகை பேருந்து நிலையத்தில்
வெள்ளரிப்பிஞ்சு விற்கின்றாள்
முள்ளூர் ஊராட்சி மன்ற தலைவி..
அவள் கையெழுத்தும் தலையெழுத்தும்
கணவனால் எழுதப்பட்டுக்கொண்டு..

 பெண்களைச் சுரண்டிப்பார்க்கும்
ஆண்வர்க்கம் பார்த்தீனியச் செடிகளென நாடெங்கும்.
 எத்தனை மசோதா இயற்றினாலும்
 மகளிர் மசோதா மட்டும்
 வாய்தா வாங்கிக்கொண்டே....

சமையல், குழந்தை பொறுப்பை
ஏற்க மறுக்கும்
ஆணினம் தொடர்ந்து
பெண்களைக்குறைகூறிக்கொண்டே...

 மகளைக்கெடுத்த தந்தைக்கு அபராதமும்
மகளுக்கு தண்டனையும் இந்தியாவில் தான். 
தெளிவான பெண்ணினம்
 ஒன்றிணையும் நாளே
உண்மையான மகளிர் தினம்...

 அழகென்பது தெளிவான சிந்தனையில் அமைந்துள்ளதென்பதை வருங்காலத்தலைமுறைக்கு உணர்த்துவோம்....இந்நன்னாளில்... பயமில்லா இந்தியாவில் பெண்கள் வாழ வழிசெய்வோம்

16 comments:

  1. உண்மை தான் ..
    வாழ்த்துகள் கீதா

    ReplyDelete
  2. மகளிர் தின வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  3. அன்பின் பதிவருக்கு...பெண்கள்தின வாழ்த்துகள்...
    அதுசரி ஒன்றிணைந்து என்னதான் செய்யப்போகின்றிர்கள்....?

    ReplyDelete
    Replies
    1. நன்றி ...எதுவோ பண்றோம்..நீங்க என்னா பண்றீங்கன்னு என்னைக்காவது கேட்டிருக்கோமா...சொல்லக்கூட கூடாதுன்னு கேள்வி கேக்குறீங்களே நியாயமா?

      Delete
  4. அருமை அருமை மா,, எதிர்பார்ப்போம்,, பயமில்லா இந்தியா ,,,

    ReplyDelete
  5. ஊராட்சி ஒன்றியத் தலைவி என்பதை
    ஊராட்சி மன்றத் தலைவி என்று மாற்றவும்.
    ஆமாம் நல்ல கவிதையின் வரிகளுக்கிடையே அதிகமாக உள்ள இட ஒதுக்கீடு ஏன்?
    அதை அன்பு கூர்ந்து மாற்றவும். படிக்கச் சிரமமாக உள்ளது. கவிதை அருமை, நாட்டு நடப்பை எழுதி, தீர்வுகாணத் தூண்டும் கவிதைக்கு த.ம.வா.1

    ReplyDelete
    Replies
    1. மாத்திட்டேன் அண்ணா....ஏதோ என் வலைப்பூக்கு பாதிப்பு அடிச்சா தள்ளித்தள்ளி வருதுண்ணா..

      Delete
  6. மகளிர் தின வாழ்த்துக்கள் சகோ
    தங்களை அறிமுகப்பதிவில் இணைத்திருக்கின்றேன் என் தளம் வருக.

    ReplyDelete
  7. அருமையான சிந்தனை...

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. ந்ல்ல சிந்தனை...வாழ்த்துகள் சகோ

    ReplyDelete
  9. அருமையான சிந்தனை வாழ்த்துக்கள் நட்பே

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...