Friday 2 October 2015

வேலை வேலை வேலை...

யு.கே நெட்வொர்க் அலுவலகத்தில் காலையில் பத்திரிக்கைகளை உரையிலிட்டு முகவரி ஒட்டும் பணியில் ஒரு குழு ஈடுபட....



அடுத்த குழுவில் இரண்டு நாட்கள் பள்ளி சுற்றுலா சென்று விட்டு அப்போதுதான் வந்தசுற்றுலா  ஸ்ரீமலை தனது  கையேட்டுப்பணியில் வைகறையுடன் சேர்ந்து ஈடுபட..


யு ,கே,கார்த்திக் தலைமையிலான குழு விழா நிகழ்வை நேரலையாக காட்டும் முயற்சியில் ஈடுபட...அடடா...திருமணவிழா போல அனைவரும் ஒன்றிணைந்து செயல் பட்ட காட்சி அம்மம்மா...இப்படி ஒரு மகிழ்வு கிடைக்க என்ன செய்தோம்...வலைத்தளம் திறந்த  ஒன்று தான்...

காலையில் அமெரிக்காவில் இருந்து மதுரையைச்சேர்ந்த விஜய் விழா குறித்து பேசும் பொழுது...தமிழ் பிளாக் சங்கமம் என ஒரு ஆப் வைத்துள்ளதாகவும்...அது தொடர்பான விளம்பரம் கொடுக்க பேசியவரை முதலில் வலைத்தளம் ஆரம்பியுங்கள்னு சொல்லி..ஆரம்பிக்க வச்சுட்டோம்ல...

நேற்றே வருகைப்பதிவு முடிஞ்சிடுச்சு என்றாலும் இன்றும் 7 பதிவர்கள் மாலை 8 மணி வரை பதிய ,பாவம் டிடி சார் அவர்களின் பணிகளுக்கு இடையே எங்களுக்காக உதவி செய்து வருவதற்கு என்ன கைம்மாறு செய்யப்போகின்றோம்...எங்களில் ஒருவராய் அவரை இணைத்துக்கொண்டதைத்தவிர ,,,


கியூ ஆர் கோட் கையேட்டில் போடலாம்னு ஐடியா கொடுத்த கோபிநாத்...இணையத்தளம் தொடர்பான ஷார்ட் கட் கீ புக் எடுத்து வந்து அதன் சிறப்பைக்கூறினார்..அனைவருக்கும் பயனாக இருக்கும் அந்நூல்...விழாவில் கிடைக்கும் விற்பனைக்கு...

மாலையில் மொத்த விலைக்கடையில் நானும் ஜெயாவும் கைப்பை விலை விசாரிக்க 300கைப்பைகளின்  விலை ரூ 45000 என்றார் கடைகாரர்...போட்ட பட்ஜெட்டில் பாதி மட்டும் வசூலான நிலையில் கையேடும், கைப்பையுமே ஒரு தொகையை எடுத்துக்கொள்ளும் போல.....

இருந்தாலும் முடிந்தவரை முயற்சிப்போம்னு நிலவன் அண்ணா கூறி கையேட்டு பணியில் மூழ்கியுள்ளார்...

பதிவர் பழனி.கந்தசாமி அய்யா மற்றும் துளசிதரன் ,கீதா ஆகியோருக்கு அறை முன்பதிவு பண்ணியாச்சு அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ..அவர்கள் செலவில்...

நாளை அழைப்பிதழ் அனுப்பும் பணி,துவங்க உள்ளது...தொடர்வோம்..

27 comments:

  1. என்ன வேகம் என்ன வேகம்..
    இப்பவே புதுக்கோட்டை களை கட்டுதே..!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார் இவ்ளோ பணியிலும் கட்டுரை எழுதியுள்ளீர்களே வாழ்த்துகள்..வெற்றி பெற..

      Delete
  2. உங்கள் இல்ல நிகழ்ச்சிகளுக்காகக் கூட இவ்வளவு உழைத்திருக்க மாட்டீர்கள் சகோதரியாரே
    ஒரு முறை எனது பத்தாம் வகுப்பு மாணவி கேட்ட கேள்விதான் நினைவிற்கு வருகின்றது.
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்த அடுத்த நாள் அதிகாலையில்
    அலைபேசியில் என்னை அழைத்தார்
    சார் காலையிலேயே எழுந்து விட்டேன் சார்
    என்ன செய்வதென்றே தெரியவில்லை
    ரொம்ப போர் அடிக்கிறது என்றார்.
    அதபோலத்தான் ஓடி ஓடி உழைத்ததங்களின் மன நிலை
    12ஆம்தேதி திங்கள் கிழமை அன்று எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அண்ணா வாழ்வில் இனியொருமுறை இப்படி இணைந்து பொது விழா கொண்டாடுவது என்பது கிடைக்காது தான்...அதனால் தான் முடிந்தவரை உழைக்கின்றோம்..மகிழ்வாக...

      Delete
  3. அசராமல் அசத்தப் போகும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் வாழ்த்துகள்... நன்றிகள்...

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் அதில் முக்கியமான பங்களிப்பில் சார்/

      Delete
  4. திருமணங்களுக்குக் கூட இப்படி ஒன்று சேர்வதில்லை கீதா :-)
    பறந்து வந்துவிட மாட்டோமா என்று இருக்கிறது .

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் மா...நீங்கள் இல்லாதது குறை தான்.

      Delete
  5. நேரடி ஒளிபரப்பு போல. அவ்வப்போதைய நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டு தூரத்தில் இருக்கும் அனைவரையும் உங்களது பணிக்கும் ஈடுபடுத்திவிடுகின்றீர்கள். வாழ்த்துக்கள்.
    பௌத்த நல்லிணக்கச் சிந்தனைக்களை காண http://ponnibuddha.blogspot.com/2015/10/blog-post.html அன்போடு அழைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அய்யா.

      Delete
  6. நான் கேட்டுக்கொண்டதின் பேரில் சுறுசுறுப்பாக இயங்கி எனக்கு அறை பதிவு செய்த மு. கீதா அவர்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. இது என் கடமை அப்பா..

      Delete
  7. உங்கள் அனைவரின் ஆர்வத்தையும் அதிவேக செயலையும் பார்க்கும் போது ஓடிவந்து பணியில் ஈடுபட ஆவல் எழுகிறது தோழி.

    ReplyDelete
    Replies
    1. வாங்கடா ...உன் பெயரில் உனக்காக நான் செய்கின்றேனேம்மா...தென்றலென..

      Delete
  8. மனம் ஈடுபாடு கொள்ளும்போது அயர்வு தெரியாது.அழைப்பிதழில் நிகழ்ச்சி நிரல் இருக்கிறதா?

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் நிகழ்ச்சி நிரல் விழா நாளன்று தருகின்றோம்
      அய்யா..

      Delete
  9. அழைப்பிற்கும் தகவலுக்கும் உழைப்பிற்கும் நன்றி! நன்றி!!

    ReplyDelete
  10. உங்களின் அசுர உழைப்பை உணர்கிறேன்! விழா சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. குழு உணர்வுக்கு அசத்தலான வெற்றி கிட்டும் அக்கா...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. விட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........

    பணம்அறம்

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி..

      Delete
  13. சூப்பர்ப் கீதா !! கலக்குங்க .. வாழ்த்துகள் !!

    ReplyDelete
  14. யம்மாடியோவ்! எப்படி உழைக்கிறீர்ங்க! எல்லோரும் அதுவும் உற்சாகத்துடன், மகிழ்வுடன்...எங்களால் இங்கிருந்து எதுவும் செய்ய இயலவில்லையே என்ற குறை உள்ளது சகோ.

    தாங்கள் எங்களுக்காக நாங்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் உடன் அறை பதிவு செய்து கொடுத்தமைக்கு எங்கள் நன்றிகள் பல, வணக்கங்களும்.

    மிக்க நன்றி

    விழாவில் சந்திப்போம் சகோ!

    ReplyDelete
  15. அசுர உழைப்பு வாழ்த்துகள்.... நாள் நெருங்க நெருங்க எனக்குத்தான் ஃப்ரஷர் ஏறுகிறது....

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...