விழா நிகழ்ச்சிகள் ஏறக்குறைய முடியும் தருவாயில் உள்ளன...மகிழ்வோடு ஓடி ஓடி அனைவரும் பணிகளைச்செய்கின்றோம்....
ஏற்பாடுகள் அனைத்தும் திருப்தியான நிலையில்...
அன்றைய நிகழ்வை மனக்கண்முன் கொண்டுவந்து நிறுத்தினேன்...
இதுவரை நடந்த நிகழ்வுகள் அனைத்தும்,,,பதிவர்களின் அறிமுகம் என்ற அளவிலேயே...நடந்தது. சிறப்பு பேச்சாளர் ஒருவர் பேசியதோடு நிறைவு பெற்றுள்ளன...
இம்முறை விழாநிகழ்ச்சிகள் வரிசையாக அணிவகுத்து காத்திருக்கின்றன...
*துவக்க நிகழ்ச்சி,
*ஓவியக்கண்காட்சி திறப்பு
*அறிமுகம் ,
*போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு,
*போட்டிக்கு போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு,
*விருது கொடுக்கும் தமிழ் இணையக்கல்விக்கழகத்தைச் சார்ந்தஉதவி
இயக்குநர் திருமிகு .தமிழ்ப்பரிதி அவர்களின் வாழ்த்துரை,
*விக்கி மீடியாவைச்சார்ந்த திருமிகு இரவிசங்கர் அவர்களின் வாழ்த்துரை
*புதுகை கணினிச்சங்கத்தை தோற்றுவித்த முனைவர் அருள்முருகன் அய்யாவின் வாழ்த்துரை...
*கரந்தை அண்ணாவின் புத்தக வெளியீடு
*சகோதரர் ரூபனின் புத்தக வெளியீடு
*சிறப்பு விருந்தினர்களை கௌரவிக்கும் நிகழ்வு
*சிறப்பு விருந்தினர் எழுத்தாளர் எஸ்.ராமக்கிருஷ்ணன் அவர்களின் சிறப்புரை
*விழாமுடிவு..
*இதற்கு நடுவில் உணவு இடைவேளை...
காலம் போதுமா....232 பதிவர்கள் வருகைப்பதிவு செய்துள்ளார்கள்.இதனை பேரும் அறிமுகம் ஆக ஒரு நிமிடம் என வைத்தாலே 4 மணி நேரம் தேவை.பதிவு செய்யாதவர்களும் வரலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது...
பதிவின் போது நேரும் இடர்பாடுகள் ஒரே நேரத்தில் அனைவரும் பதிவு செய்யும் போது நிகழும் சிக்கல்..
உங்களின் முழு ஒத்துழைப்பும் காலச்சிக்கனமும் இருந்தால் மட்டுமே விழா எதிர்பார்த்த வெற்றியைத்தழுவும் என்பது மறுக்க வியலா உண்மை..
அனைவரின் எதிர்ப்பார்ப்பு... வலைப்பதிவர் சங்கத்தை இவ்விழா உருவாக்குமா என்பது ......?
ஆவலுடன் நானும்..
ஹாஹாஹா இந்த ஆசையெல்லாம் டூட்டூமச் இல்லையா ?
ReplyDeleteவிழா சிறப்புற வாழ்த்துகள்
ஆனா இருந்தா நல்லாருக்கும்ல....சகோ...நன்றி..
Deleteநான் இன்று தான் நிகழ்ச்சி நிரலைப் படிக்கிறேன் அப்பாடா எவ்வளவு நிகழ்வுகள் நடக்க இருக்கின்றன நிஜமாகவே புயல் வேக செயல்பாடுதான் உங்கள் குழுவினருக்கு வாழ்த்துக்கள். கண்டிப்பாக வருகிறேன் . முடிவெடுத்து விட்டேன்....
ReplyDeleteஅய்..வாங்க வாக...ஆவௌடன் காத்திருக்கின்றோம்மா..
Delete:) (y) அருமை !! வாழ்த்துகள். ..
ReplyDeleteமிக்க நன்றிமா...
Deleteஅப்பப்பா!.. நினைக்கவே இனிக்கிறது!
ReplyDeleteநிகழ்ச்சிகளின் வரிசையைக் காண்கையில்
வரமுடியவில்லையே என்று மனம் ஏங்குகிறது மா!
எல்லாம் சிறப்புற அமைய வாழ்த்துக்கள்!
உண்மைதான் நீங்க ,இனியா, கிரேஸ் ,விசு சார் ,கில்லர்ஜி இன்னும் இவ்விழாவை ஆவலுடன் எதிர்பார்க்கும் அனைவரும் வர முடியாத நிலை குறித்து எங்களுக்கும் வருத்தம் தான்மா.
Deleteநன்றாகவே நடக்கும். கவலை வேண்டாம்.
ReplyDeleteமிக்க நன்றி அய்யா..
Deleteநிகழ்வு கண்கவர் நிகழ்வாக
ReplyDeleteஉள்ளத்தை கொள்ளை கொள்ளும் நிகழ்வாக
நடந்தேறும்
மகிழ்ச்சி சகோதரியாரே
தம +1
ஒரு குறிப்பு: சிறப்பு விருந்தினர்கள் பொதுவாக தேனீர் இட்வேளை அல்லது மதிய உணவு வரைக்கும் மட்டுமே இருப்பார்கள். அதற்கு மேல் இருந்தால் அது கௌரவக் குறைச்சல் என்று பெரும்பாலான அதிகாரிகள் எண்ணுவார்க்ள.
ReplyDeleteநிகழ்ச்சி நிரல் பிரகாரம் அவர்கள் கடைசி வரை இருப்பார்கள் என்ற கருத்தில் இருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்.
இதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
கலந்து கொண்டு முடித்துவிட்ட பிறகு என் மனவோட்டத்தில் ஓடியதை முன்னரே உரைத்திருக்கிறீர்கள் என்பதை வியப்பாக பார்க்கிறேன். இளைமையின் வேகத்திற்கு சரியான வழிகாட்ட முதுமையின் அனுபவம் எவ்வளவு தேவை.
Deleteஅழகான நிகழ்ச்சி நிரல். பெரும் சிரமமாக இருந்த பதிவர் அறிமுகத்திற்கு விடை கிடைத்ததா?
ReplyDeleteத ம 2
முன்ஏற்பாடுகள் பிரமிக்க வைக்கின்றன.மிக சிறப்பாக நடக்கும் என்பதில் ஐயமில்லை. உண்மையில் 24 மனிமேரம் போதாது
ReplyDelete//பதிவின் போது நேரும் இடர்பாடுகள் ஒரே நேரத்தில் அனைவரும் பதிவு செய்யும் போது நிகழும் சிக்கல்..//
ReplyDeleteமூன்று நான்கு இடங்களில் பதிவு செய்ய ஏற்பாடு செய்தால் கூட்ட நெரிசலைத் தவிர்க்லாம். இந்த இடங்களில் இந்தந்த மாவட்டங்கள் என்று குறிப்பிடவேண்டும். திரு ரமணி அய்யாதான் இந்த யோசனையை முன் வைத்தவர்.
அனைவரும் ஒத்துழைக்கும் பட்சத்தில்
ReplyDeleteநேரம் ஒரு பொருட்டாய் இருக்காது
பார்ப்போம்
எதற்கும் அசராமல் அசந்து போக வைப்போம்...
ReplyDeleteநன்றி...
நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...
இணைப்பு : →பதிவர்களின் பார்வையில் "பதிவர் திருவிழா-2015"←
புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
புதுக்கோட்டை நண்பர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும். சேர்த்தப் பணத்தை சிக்கனமாக செலவு செய்யும் உங்களைப் போன்ற பொருளாளர் இருக்கும் போது, இறைவன் அருளால் எல்லாமே நல்லபடியாகவே நடக்கும்.
ReplyDeleteநிகழ்ச்சிகள் அதிகம் அதற்கான நேரமோ குறைவு தான் உங்க அனைவரது வேகத்தை அன்று வரும் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்துவிடுவோம்.
ReplyDeleteஉண்மைதான்! விழா நிகழ்வுகள் பங்கேற்பாளர்களின் காலச்சிக்கனத்தை பொறுத்தே இருக்கிறது! சிறக்கட்டும் விழா!
ReplyDeleteதங்களது நூல்களை தளத்தில் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். அன்று ஒரு நாளைக்கு மட்டும் 48 மணி நேரமா? பேராசைதான். நல்லதுக்கு பேராசைப்படுவதில் தவறில்லை.
ReplyDeleteவரமுடியாத தூரத்தில் என்றாலும் விழா சிறப்பாக அமைய பிரார்த்திக்கின்றேன்.
ReplyDeleteநல்லதே நடக்கட்டும்!
ReplyDeleteகீதா அம்மா!
ReplyDeleteஉங்கள் குழுவின் உழைப்பை பார்ட்டி சில வரிகள். இதை, உங்கள் புகழை, இங்கு பகிர அனுமதி[பீர்கள் என்று நம்புகிறேன்.
முத்துநிலவன் மற்றும் அவர் குழுவிற்கு என் அநேக நமஸ்காரங்கள்! இப் படை வெற்றி அடையாவிடின் எப்படை வெற்றி கொள்ளும். இனி, அடுத்த பதிவர் விழாவிற்கு புதுக்கோட்டை சந்திப்பை தான் எல்லோரும் உதாரணமாக கொள்வார்கள்------கொள்ளவேன்டும்!
புதுக்கோட்டை பதிவர் சந்திப்பு ஒரு Bench Mark--என்று எடுத்துக் கொள்ளவேண்டும். இது மாதிரி இனிமேல் இப்படி ஒரு விழாவை, முத்துநிலவன் குழுக்கள், மாதிரி மற்றவர்கள் நடத்துவது கடினம் என்று சொல்வதைவிட---Impossible---என்று சொல்லலாம்.
முத்துநிலவன் குழு உழைப்ப்பு வாழ்க!