பிஞ்சுகளின் வலி
---------------------------------
இன்று வகுப்பில் மாணவர்களின் குடும்பச்சூழ்நிலைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் ஒவ்வொருவராக அழைத்துக்கேட்டுக்கொண்டிருந்தேன்...
அப்பாக்களின் வேலைகளாக பூ விற்றல்,குப்பை பொறுக்குதல்,வண்டி கிடைக்கும் போது ஓட்டுநராக செல்லுதல்,மளிகைக்கடையில் பணியாள், கொத்தனார் ,சித்தாள்,துப்புரவாளர் என ஒவ்வொருவரும் வந்து பெருமையாகக்கூறிச்சென்றனர்...
ஒரு குழந்தை தயங்கித்தயங்கி வந்தாள்...அவளிடம் என்னடா உன்
குடும்பத்தில் எத்தனை பேர் யார் யார் என்ன செய்யுறாங்கன்னு விசாரித்தேன்...மெதுவான குரலில் யாருக்கும் கேட்காதவாறு அப்பா கடையில் வேலை செய்கிறார் என்றாள்..மாமா கடை வச்சு கொடுத்திருக்காங்க அந்தக்கடையில் என்றாள்...ஏன் இவள் இவ்ளோ தயங்குகிறாள் என்று எண்ணி என்ன கடைம்மா? என்றேன்....
கண்கலங்க பார்ல என்று கூறிவிட்டு தலைகுனிந்து கொண்டாள்...அவளின் தயக்கத்தில் தனது அப்பா செய்யக்கூடாத வேலை செய்கிறாரே என்ற வேதனையா?அல்லது அவர் குடித்து விட்டு வீட்டில் செய்யும் ரகளையைக்குறித்தா ?.....
தினமும் வகுப்பில் மதுவால் எழும் பிரச்சனைகளை கூறி உங்கள் வீட்டில் யாராவது குடித்தால்...நீங்கதான் பொறுமையா சொல்லித்திருத்தனும் என்ற வார்த்தைக்கு எதிராக அப்பா வேலை பாக்குறாங்களே என்ற தவிப்பா...?
என்ன சொல்வது....தி இந்துவில் ”ஒவ்வோர் அவமதிப்பும் ஒரு மரணம் “என்ற பேராசிரியர் மாடசாமி அய்யா எழுதிய கட்டுரை நினைவில் வந்தது....குழந்தைகளின் மன அவலங்களை ,பெரியோர்களின் உலகில் குழந்தைகளின் உணர்வுகள் சிதைக்கப்படுவதை....கூறுவதாக அக்கட்டுரை அமைந்துள்ளதன் உண்மையை உணர முடிந்தது..

உண்மைதான் சகோ வேதனையான விசயமே...
ReplyDeleteதமிழ் மணம் 1
குழந்தைகளின் வேதனை அளவிடமுடியாதது சகோ..
Deleteகுழந்தைகளின் வேதனை அளவிடமுடியாதது சகோ..
Deleteகுழந்தைகளின் வேதனை குடிகாரர்களுக்குத் தெரிவதில்லையே
ReplyDeleteதம +1
உண்மை அண்ணா
Deleteஅப்பா அவ்வாறான கடையில் வேலை பார்ப்பது குழந்தைக்கு மனதில் வலியை உண்டாக்கத்தான் செய்யும். இருந்தாலும் அவர் குடிக்காமல் இருந்தால் சரி என்பதை அக்குழந்தை உணர பல வருடங்கள் ஆகும்.
ReplyDeleteஉண்மை அய்யா ..ஆனால் அப்பா அம்மாவை குடித்துவிட்டு அடிக்கும் போது என்ன செய்யு, குழந்தைகள்..
Deleteகுழந்தையின் வேதனையை சொல்றீங்க
ReplyDeleteபெங்களூரில் பயிற்சியில் இருந்தபொழுது கர்நாடக ஆசிரியர் ஒருவர் இதே போல் என்னிடம் வருந்தினார்.
என் அப்பா ரெண்டாம் நம்பர் பிசினெஸ் நண்பரே என்றார்.
அவர் வேதனை அவரது வயதிற்கு அர்த்தமற்றது எனினும் அந்த வேதனை கலந்த குரல் இன்னும் செவி மடல்களில் இருக்கிறது ...
தம +
மனதின் வலிகள் ஆழமாகின்றது ...
Deleteமனம் வலிக்கிறது...
ReplyDeleteஆம் சார்..
Deleteகுழந்தையின் வேதனையினை பெற்றோர் உணர வேண்டும். முடிந்தால் அந்த பெற்றவரை அழைத்து ஆலோசனை தரவும். நன்றி!
ReplyDeleteஎன்ன சொன்னாலும் கேட்பாங்க ஆனா செய்ய மாட்டாங்க சகோ/....
Deleteவேதனை தரும் விஷயம்... அக் குழந்தையின் மனது என்ன பாடு பட்டிருக்கும்.....
ReplyDeleteத.ம. 6
என்னால் சொல்லமுடியாத அளவுக்கு சார்...
Delete