Saturday 1 August 2015

முழு நிலா முற்றத்திற்காக வாசித்த-கவிதை

முழு நிலா முற்றத்திற்காக வாசித்த-கவிதை
----------------------------------------------------------------------------
அழகான தங்கத்தட்டென்றேன்
சுவையான ஆப்பமென்றான்

வானமகளின் பொட்டென்றேன்
ஆஹா இனிக்கும் ரவா லட்டென்றான்

கோளம் ஒளிந்த வட்டமென்றேன்
கோமகள் சுடும் தோசையென்றான்

தகத்தகக்கும் வெண்பட்டென்றேன்
தாய் தந்த வெள்ளை அப்பமென்றான்

தின்பதைத்தவிர வேறெதும் தெரியாதா என்றேன்
நீ கண்ணால் உண்பதை
நான் வாயால் சுவைக்கின்றேன் என்றான்

பசி அடங்காத இருவரையும்
பார்த்து சிரித்தது நிலா....

16 comments:

  1. ஹாஹா
    சில சமயம் இப்படி நடக்கும் :))

    ReplyDelete
  2. தமிழ்மணம் இணைத்து வாக்கும் இட்டாயிற்று :)

    ReplyDelete
  3. இங்கிருந்து நிலா முற்றம் ரசித்தோம். நன்றி.

    ReplyDelete
  4. இரண்டு பார்வை
    இரண்டு மனம்
    இரண்டு சிந்தனை
    www.thamizhmozhi.net

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி

      Delete
  5. அருமையான உவமை ஏட்டிக்கு போட்டியாக....

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி சகோ

      Delete
  6. மிகவும் ரசித்தேன் தோழி! :)

    ReplyDelete
  7. பசி அடங்காத இருவரையும்
    பார்த்து சிரித்த நிலா.... எப்படி சிரித்து இருக்கும்...????

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...