இதுவா பெருமை?
450 மதிப்பெண்களுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் உள்ளே நுழைய அனுமதி..
எங்க பள்ளியிலேயே படித்திருந்தாலும் 450 க்கு மேல இருந்தா வாங்க...
எல் கேஜி முதல் 9 வரை எங்க பள்ளியில படிச்சாலும் அவன் சரியா படிக்கல டிஸி வாங்கிட்டு போயிடுங்க.
பீஸு கட்டலன்னா உங்க குழந்தைய டார்ச்சர் பண்ணி அவமானம் செய்வோம்.முடியலன்னா போயிடுங்க.
நாங்க டியூஷன் மாதிரி கேள்விய மனப்பாடம் தான் பண்ணச்செய்வோம்.அவனுக்கு புரிந்தாலும் புரியலன்னாலும் கவல இல்ல..
நாங்க முதல் மதிப்பெண் எடுத்தோம்னு விளம்பரம் பண்றத பாத்து பணத்த கொட்ட பெற்றோர்கள் தயாரா இருக்காக.
அவங்களே அவங்க குழந்தைய படிக்க வச்சுடுவாங்க...
அவங்க காசுல கட்டிடம் கட்டி அவங்களயே உள்ள விடாம அவமானப்படுத்துனாலும் பொறுத்துப்பாங்க...ஏன்னா அவங்க குழந்த எங்க கையில....
தடுக்கி விழுந்தா தனியார் பள்ளி நடத்த அனுமதி கொடுத்துட்டு அரசு பள்ளியில் குழந்தைகள் இல்லன்னு மூடுவது சரியா.
மிகக்குறைவான மதிப்பெண்கள் வாங்கிய குழந்தையை படிக்க வைத்து மதிப்பெண்கள் பெற பாடுபட்ட அரசுப்பள்ளி ஆசிரியரைப்பாராட்டாமல்..100%மதிப்பெண் பெற்றுவிட்டது என தனியார் பள்ளிகளை போற்றுவது முறையா?
படின்னுகூட சொல்லாத பெற்றோரைக்கொண்ட குழந்தைகளை பாராட்ட வேண்டாமா?

இன்றைய கல்வி நிலையின் அவலத்தை அழகாய் எடுத்து கூறியிருக்கிறீர்கள். நன்றி!
ReplyDeleteத ம 1
//தடுக்கி விழுந்தா தனியார் பள்ளி நடத்த அனுமதி கொடுத்துட்டு அரசு பள்ளியில் குழந்தைகள் இல்லன்னு மூடுவது சரியா.//
ReplyDeleteசரியில்லைதான்.
//மிகக்குறைவான மதிப்பெண்கள் வாங்கிய குழந்தையை படிக்க வைத்து மதிப்பெண்கள் பெற பாடுபட்ட அரசுப்பள்ளி ஆசிரியரைப்பாராட்டாமல்.. 100%மதிப்பெண் பெற்றுவிட்டது என தனியார் பள்ளிகளை போற்றுவது முறையா?//
முறையில்லைதான்.
//படின்னுகூட சொல்லாத பெற்றோரைக்கொண்ட குழந்தைகளை பாராட்ட வேண்டாமா?//
நிச்சயம் பாராட்ட வேண்டும்தான்.
//இதுவா பெருமை?//
இதுதான் இன்றைய பெருமையாக உள்ளது. என்ன செய்ய?
எனினும் அனைவரையும் யோசிக்க வைக்கும் தங்களின் அருமையான பகிர்வுக்கு நன்றிகள்.
நாலு வரிஎன்றாலும் சும்மா நச்சுன்னு இருக்கு புரிய வேண்டியோருக்கு புரியணுமே .....! ம்ம் தொடர வாழ்த்துக்கள்
ReplyDeleteதம +1
வணக்கம்
ReplyDeleteஉண்மைத்தன்மையை சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமை சகோ இன்றைய அவலத்தை அழகாக விவரித்து உள்ளீர்கள் இதற்கெல்லாம் மூலகாரணம் நாம்தானே...
ReplyDeleteஇதுக்குதான் கீதையிலே சொல்லி இருக்காங்களே ,கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே:)
ReplyDeleteகழுதைகளை குதிரைகளாக மாற்றுபவர்கள் அரசாங்க பள்ளி ஆசிரியர்கள். குதிரைகளை குளிப்பாட்டி வைப்பவர்கள் தனியார் பள்ளி ஆசிரியர்கள்.
ReplyDeleteபுத்தக புழுக்களை பூமியில் உற்பத்தி செய்யும் பள்ளிக் கூடங்களை
ReplyDeleteபளிச்சென்று பதிவில் இனம்காட்டி உள்ளீர்கள் சகோ!
அறிவு சார்ந்த மாணவ மாணவிகளை வெறும் மதிப் பெண்களை வைத்து மட்டுமே
தகுதி என்று சொல்ல முடியாது!
நமது கல்வி முறை
சொன்னதை சொல்லும் , அசலை நகலாக்கி காட்ட மட்டுமே பயன்படுகிறது.
நல்ல பதிவு! வரவேற்பை பெற வேண்டும்! நிச்சயம் பெறும்!
நன்றி த ம 4
நட்புடன்,
புதுவை வேலு
(சகோ! பெண்ணின் பாது காப்பை பறைசாற்றும் இன்றையை பதிவினை காண குழலின்னிசை பக்கம் வாருங்கள்)
இன்றைய கல்வி நிலையை அப்பட்டமாய் தோலுரித்துக் காட்டியுள்ளீர்கள்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிகள் தோழி.
இன்றைய கல்வி நிலை, மாணவர்களின் அவலம், பெற்றோர்களின் சோகம், கல்வி நிறுவனங்களின் வியாபார நோக்கு என அனைத்தையும் யதார்த்தமாக வெளியிட்டுள்ள விதம் நன்று. கல்வி நிறுவனங்கள் திருந்தவா போகின்றன? ஊகூம்.
ReplyDeleteஇன்றைய கல்வியின் உண்மை முகமே இதுதானே
ReplyDeleteதம +1
இன்றைய உண்மை - கொடுமை...
ReplyDeleteஇன்றைய அவல நிலையை அழகாகச் சொன்னீர்கள்
ReplyDeleteஉண்மை! உண்மை முற்றிலும்! உண்மை! இதுதான் இன்றைய தனியார் பள்ளிகள் நடைமுறை
ReplyDeleteஇது தான் ரொம்ப நல்ல பள்ளி...
ReplyDeleteஎல்லா பள்ளியும் இதில அடங்கும்..
என்னத்தை சொல்வது
தம +