WHERE DO WE GO NOW?-நதீன் லபாகி
----------------------------------------------
லெபனான் நாட்டு திரைப்படம்.
லெபனான் நாட்டிலுள்ள குக்கிராமம் பற்றிய திரைப்படம்.கிறித்தவர்களும் இஸ்லாமியர்களும் சரிசமமாக வாழும் இக்கிராமத்தில் தேவாலயமும் மசூதியும் அருகருகே இருக்கிறது.ஊருக்கு வெளியே இரண்டு மதங்களுக்குமான இடுகாடுகளும் அருகருகே உள்ளன.மதமோதல்களால் கொலை நடப்பதும்,பின் இயல்பாக வாழ்வதுமான மக்களின் வாழ்க்கை.
படத்தின் துவக்க காட்சியாக வீட்டு ஆண்களை இழந்த கிறித்தவப்பெண்களும்,இஸ்லாமியப்பெண்களும் கையில் பூங்கொத்துகளையும் தங்கள் அன்பானவனின் புகைப்படத்தையும் ஏந்தி இடுகாட்டை நோக்கிச் செல்வதாக அமைகிறது.மனதைப்பிழியும் கவிதை வரிகளுடன் துவங்குகிறது படம்.
கிராமத்திற்கு தேவையான பொருள்களை வாங்கி விற்கும் இரண்டு இளைஞர்கள் டிஷ் ஆண்டனா ஒன்றை எடுத்து வந்து பழைய தொலைக்காட்சிப்பெட்டியை சரி செய்து கிராம மக்கள் அனைவரும் பார்க்கும் படி செய்கின்றார்கள்...
ரேடியோவிலும் ,தொலைக்காட்சியிலும் வரும் மதச்சண்டைகள் தங்கள் கிராமத்திலும் நிகழ்ந்து விடுமோ என்ற அச்சத்திலேயே வாழும் அக்கிராமப் பெண்கள் படும்பாடு ..அவற்றின்.இணைப்புகளை அறுத்து,எவ்வளவோத் தடுத்த போதும் சண்டை துவங்கும் சூழ்நிலை.
உக்ரைன் நாட்டு அழகிகளை அழைத்து வந்து தங்கள் கிராமத்து ஆண்களை திசைத்திருப்ப முனைகின்றனர்.
தற்செயலாக அந்த இளைஞரில் ஒருவன் இறந்து விட மீண்டும் சண்டை மூள்கிறது,...
தடுக்க எண்ணி ஆயுதங்களை ஒளித்து வைக்கிறார்கள் பெண்கள்.ஆண்கள் உண்ணும் ரொட்டியில் தூக்க மருந்தை கலந்து தருகிறார்கள்.
இறுதியாக அவர்கள் செய்யும் செயல் தான் அதிர்ச்சியின் உச்சிக்கு அழைத்துச் செல்கிறது.இஸ்லாமியப்பெண்கள் எல்லோரும் கிறித்தவர்களாகவும்,கிறித்தவப்பெண்கள் அனைவரும் இஸ்லாமியப்பெண்களாகவும் மாறிவிடுகிறார்கள்.
நாங்கள் இப்போது எதிரி மதத்தைச் சார்ந்தவர்கள் தானே?முதலில் எங்களைக்கொன்று விட்டு மற்றவர்களைக் கொல்லப்போங்கள் ...என்று கதறுகிறார்கள்.ஆண்கள் திகைத்து நிற்க..செத்துப்போன இளைஞனின் அம்மாவும் ,அண்ணியும் இப்போது இஸ்லாமியர்கள்.அண்ணன் கிறித்தவர்.
செத்துப்போன இளைஞன் இஸ்லாமியனா?கிறித்தவனா?என்ற கேள்வியுடன் நாங்கள் எங்கே செல்வது என்ற கேள்வியுடன் படம் முடிகின்றது.
2011இல் வெளிவந்து 2012 இல் கேன்ஸ் திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளைப் பெற்றது.டொரண்டோ,ஓஸ்லோ,தோஹா திரைப்படவிழாக்களில் மக்களுக்குப் பிடித்த படங்கள் என்ற பரிசினைத் தட்டிச்சென்றது.
புதுகையில் பிலிம் சொசைட்டி நடத்தும் திரு எஸ்.இளங்கோ அவர்கள் மாதாமாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் உலக சினிமாக்களில் சிறந்த திரைப்படங்களை வெளியிடுவார்கள்.இம்மாத மகளிர் தினச்சிறப்பு நிகழ்வாக இப்படத்தைக்காண வாருங்கள் என்று அழைத்தார்.
லெபனான் நாட்டு பெண் இயக்குநர் நதீன் லபாகி என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இனிய பகிர்வு.
ReplyDeleteசிறந்த விமர்சனம் சகோ...
ReplyDeleteஇதில் கூட்டதோடு கூட்டமாக கோவிந்தா போட இந்து மதம் வரலையோ...
தமிழ் மணம் 1
வணக்கம்
ReplyDeleteவிமர்சனத்தை படித்த போது படம் பார்க்க வேண்டும் என்ற ஆசைதான் வருகிறது வெகு சிறப்பாக உள்ளது.பகிர்வுக்கு நன்றி த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்ல விமர்சனம்...
ReplyDelete