Friday 20 March 2015

மாயமானாய்

மாயமானாய்....
---------------------------
அருகில் இருப்பதைத் தொலைவிலும்
தொலைவில் இருப்பதை அருகிலும்
போட்டு காலமாடும் சூதாட்டம்...

துன்பத்தை அழித்து இன்பத்தையும்
இன்பத்தைப் பிடுங்கித் துன்பத்தையும்
ஈந்து பல்லிளித்து நிற்கிறது....

சிறுவயது ஆசைகளை
முதிர் வயதில் தந்து
அனுபவிக்கவியலா  துக்கத்தையளித்து
 தள்ளியே நிற்கிறது..

இருப்பவன் மனமற்றும்
இல்லாதவன் முழுமனதுடனும்
கையறு நிலையில்
கரை கட்டி வைக்கின்றது...

காலவெள்ளத்தில் மூழ்கும் போது
காப்பாற்றி கைதூக்கி
கரைசேரவும் உதவுகின்றது...

இறுதியில்
இதுவும் கடந்து போகுமென
 கூறாமல் கூறுகின்றது




6 comments:

  1. நிலையாமை? குறிப்பாக எதைப் பற்றிய கரு என்று புரியவில்லை என்றாலும் நன்றாயிருக்கிறது.

    ReplyDelete
  2. வாழ்வியல் சித்தாந்தம் அருமை சகோ
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  3. சிறப்பான சிந்தனை! அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. காலம் செய்யும் கோலம் !
    கவிதை நன்று!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...