பாராட்டப்பட வேண்டிய மனிதராக...
தமிழ்நாட்டின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர் இராமன் விஜயன்...
தமிழ் நாட்டில் காரைக்குடிக்கு அருகில் உள்ள கண்ட்ரமாணிக்கம் என்ற கிராமத்தில் இருந்து இந்திய அணியின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர்...தோழர் இராமன் விஜயன்....
இவர் உருவாக்கியுள்ள கிராமத்து குழந்தைகளைக்கொண்ட கால்பந்து அணியினர் தற்பொழுது சிங்கப்பூரில் போட்டிகளில் வாகை சூடி வந்துள்ளனர்.இந்த அணி உருவாக்க அவர் பட்ட சிரமங்கள் எண்ணிலடங்கா...
விளையாட்டில் பிரகாசிக்கும் வீரர்கள் அனைவரும் பணி கிடைத்தவுடன் ....விளையாட்டை மறந்து விடுவது தான் தமிழகத்தில் சிறந்த அணி உருவாகாததற்கு காரணம்.மேலும் தமிழ்நாட்டில் புரொபசனல் கிளப் கால்பந்தாட்டத்திற்கு என இல்லை.எனக்கூறும் இவர்..1993இல்.இந்தியன் வங்கியில் பணி கிடைத்து 3 வருடங்கள் பணி புரிந்து ...தனது குறிக்கோளை நோக்கி செல்வதற்காக பணியைத்துறந்து ..கால்பந்தாட்ட வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளராக மற்ற வீரர்களுக்கு முன் உதாரணமாகத்திகழ்கின்றார்.
சமீபத்தில் நடைபெற்ற இந்திய சூப்பர் லீக் குழுவைத்தேர்வு செய்யும் உறுப்பினராகக் கலந்து கொண்டு அணி வீரர்களைத்தேர்வு செய்துள்ளார்..
தான் பிறந்த கிராமத்தைச்சுற்றியுள்ள குழந்தைகளைத்தேர்வு செய்து பயிற்சி அளித்து தற்பொழுது தன் முயற்சியால் சிதம்பரத்தில் கல்வி கற்றுக்கொடுக்கின்றார்....நல்ல மனங்கள் கொண்ட நண்பர்கள் இவரது முயற்சிக்கு தோள் கொடுக்கின்றனர்....இவரால் உருவாக்கப்பட்ட இந்த அணிதான் தற்போது சிங்கப்பூரில் போட்டிகளில் கலந்து கொண்டு அரை இறுதி வரை வந்துள்ளது....பேரூந்தில் செல்வதையே பெருமையாக நினைக்கும் குழந்தைகளை விமானத்தில் அமரவைத்து வெளிநாட்டிற்கு அழைத்து சென்று வியப்பில் ஆழ்ந்த குழந்தைகளை பார்த்து ரசிக்கும் மனித நேயமுள்ள சிந்தனையாளர்....
என் பள்ளிக்கு வந்திருந்த அந்தியூர் மலைப்பகுதிக் குழந்தைகளைப்பற்றி அறிந்த போது ..அவர்களில் நன்கு விளையாடக்கூடிய குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து கொண்டுவரலாம் எனக்கூறியுள்ளார்...
தான் தனது என்று வாழும் மக்களின் நடுவில் ..தமிழ்நாட்டில் கால்பந்திற்கென ஒரு குழுவை உருவாக்கி உலகப்புகழ் பெற வைக்க வேண்டும் என்ற குறிக்கோளை நோக்கி போராடிக்கொண்டிருக்கும் அவரது கனவு பலிக்க வாழ்த்துகள்...
இன்று நியூஸ் 7 தொலைக்காட்சி அவரது நேர்காணலை காலை 8.00 அளிவில் ஒளிப்பரப்பியது..
பாராட்டப்பட வேண்டிய மனிதர்.
ReplyDeleteநிச்சயமாக...சகோ..
Deleteமிகவும் அருமையான மனிதர்..அவர் எண்ணங்கள் வெற்றியடைய வாழ்த்துகள்! அந்தியூரில் இருந்து சிறந்த கால்பந்தாட்ட வீரர்கள் உருவாகட்டும்..
ReplyDeleteபகிர்விற்கு நன்றி கீதா.
உண்மை..மா..மிக்க நன்றிமா.
Deleteதமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன். த.ம.1
ReplyDeleteநன்றி மா.
Deleteகால்பந்தாட்ட வீரர் இராமன் விஜயன் அவர்களை பாராட்டுவோம்
ReplyDeleteத.ம.2
மிக்க நன்றி சகோ..
Deleteவணக்கம்
ReplyDeleteஇராமன் விஜயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி சகோ..
Deleteவிஜயன் அவர்களின் இந்த முயற்சிகளை பற்றி நானும் கேள்விப்பட்டேன்! சிறந்தவீரராக மட்டும் இல்லாமல் சிறந்த மனிதராக திகழும் அவருக்கு பாராட்டுக்கள்! நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி சகோ..
Deleteவாவ்...
ReplyDeleteநல்ல தகவல்
மிக்க நன்றி சகோ..
Deleteத ம +
ReplyDeleteத ம விற்கும் நன்றி...
Delete