உன் மனதுக்கு நீண்ட நாள் வாழனும் கிருஷ்.வாழ்த்துகள்பா
----------------------------------------------------------------------------------------------------
என் மாணவன்...15 வருடங்களுக்கு முன் நான் மேலப்பழூரில் பணி புரிந்தபோது என்னிடம் 6-8 வகுப்பில் பயின்றவன்.. வறுமையான சூழ்நிலையில் உள்ள மாணவர்கள் தான் படித்த அனைவரும் ...
மேற்படிப்பு படித்து முடித்து தற்போது இத்தாலியில் பணி புரிகின்றான்...என்னுடன் எப்போதும் தொடர்பில் பேசிக்கொண்டு இருப்பான்...நான் எனது வகுப்புக்குழந்தைகளைப்பற்றி பேசும் போதெல்லாம் சிறந்த அரசியல்வாதியாக உருவாக்குங்கள் என்று வேண்டுகோள் விடுப்பான்..
நான் மலைவாழ்குழந்தைகளைப்பற்றி எழுதியதும் அவர்களுக்கு ஏதாவது செய்யனும்..எனக்கூறியவன் எனது வங்கிக்கணக்கில் ரூ5000 போட்டுள்ளான்..
.நம்பமுடியவில்லை முதலில்.. ஏனெனில் வசதி படைத்தோரெல்லாம் பணம் நோக்கி ஓடும் காலத்தில் ...வசதியற்ற குடும்பத்தில் கஷ்டப்பட்டு முன்னேறி.நல்ல பணியில் அமர்ந்து..ஏழைக் குழந்தைகட்கு செய்யனும்னு நினைக்கின்றானே..
என் மாணவன் என்பதில் பெருமிதம் தோன்றுகின்றது.
.குழந்தைகள் நல்லவர்கள் தான் .நாம் வழிநடத்துவதில் தான் கவனமாயிருக்க வேண்டும் என உணர்கின்றேன்..
அந்த மலைவாழ் குழந்தைகட்கு எது முக்கியமான தேவை என பாதுகாவலரிடம் கேட்டு சொல்லுங்கள் என செல்வா சாரிடம் கேட்ட போது கிட்டதட்ட 250 மாணவர்களை வைத்து 6 இடங்களில் பாதுகாக்கின்றார்கள் ...அனைவருக்கும் பேனாவே பெரிய விசயமென்றும் ...அது வாங்கிதரும் படியும் கேட்டனர்...என்றார்.
மிகவும் வருத்தமாக இருந்தது.எழுதுகோலின்றி அவதிப்படும் குழந்தைகளை நினைக்கையில்..மற்ற பொருட்கள் அரசு கொடுத்து விடுவதால் பேனா ,இங்க் பாட்டில் தான் அவசியத்தேவையாக உள்ளது என்றார்கள்...
தேவையானதை தருவதே சிறப்பு என்பதால் அதையே வாங்க முடிவு செய்துள்ளேன்..
இவனுடன் இதே எண்ணமுள்ள சில மாணவர்களையாவது இணைத்து விட்டால் நான் முகநூலில் இருப்பதற்கு ஒரு அர்த்தம் இருக்கும்..
வாழ்த்துங்கள் அவன் விரும்பாவிட்டாலும்@Krish try

கிருஷ்.... பாராட்டுகள் கிருஷ்.....
ReplyDeleteஅன்புள்ள சகோதரி,
ReplyDelete‘உன் மனதுக்கு நீண்ட நாள் வாழனும் கிருஷ். வாழ்த்துகள்பா’ பார்த்தேன். உண்மையிலே அவரை நினைத்து மனது பெருமைப்பட்டது. வறுமையில் வாழ்ந்தவருக்குத்தான் வறுமையின் கொடுமை தெரியும். அவரின் தாராள உள்ளத்திற்குத் தலை வணங்குகிறேன். அவருக்குடப் பாராட்டுகள்... வாழ்த்துகள்!
எங்கள் பள்ளியின் தாளாளர் ஏழை மாணவர்கள் பத்துப் பேரைப் தேர்வு செய்யுங்கள் என்னிடம் பணித்தார். அம்மா அப்பா இல்லாத மாணவர்களாக தேர்வு செய்தேன். 11 மாணவர்களை தேர்வு செய்து கொடுத்தேன். உதவி செய்பவர்கள் ‘பெயர் சொல்ல வேண்டாம் ’என்று சொன்னதாகச் சொல்லி அவர்களுக்கு பள்ளிச் சீருடையும் ரூபாய் நூறு அன்பளிப்பாக மாணவர்களிடம் கொடுத்தார். நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று என் மனது எண்ணியது. ஆளுக்கு ஒரு ‘கேம்ளின் பேனா’ கொடுத்து மகிழ்ந்தேன்.
இதில் ஒரு மாணவனது அப்பா அம்மா எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்கள் என்பது கொடுமை. அவன் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறான். HOPE என்ற விடுதியில் தங்கி அவனோடு இன்னும் இரண்டு மாணவர்கள் அம்மா அப்பா இல்லாமல் எங்கள் பள்ளியில் படித்து வருகிறார்கள். அவர்களுக்கு மிகச் சிறிய உதவி செய்தோம் என்பதில் பெருமைப்படுகிறோம்.
நன்றி.
உங்க பிள்ளையா இருந்துகிட்டு அவர் இதை செய்யலேன்னா தான் அதிசயம்:) ரெண்டு பேருக்கும் வாழ்த்துகள்:)
ReplyDeleteநல்லாசிரியருக்கு வேறென்ன விருது வேண்டும் கவிஞரே இதைவிட?
ReplyDeleteதங்களுக்கும் தங்களின் மாணவனுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்!
நன்றி
நல்ல மாணவன்...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
படித்தவுடன் நெகிழ்கிறது மனம்..!
ReplyDelete"உண்டாலம்ம இவ்வுலகம்"...புறநானூறு பொய்யல்ல..!
தங்களைப்போலவே தங்கள் மாணவரும்..!
வாழ்த்துகள்!
சமூகப் பிரக்ஞையுள்ள ஆசிரியர் அதற்கேற்ற மாணவர். தங்கள் பணி தொடரட்டும்.
ReplyDeleteதங்கள் மாணவருக்கு வாழ்த்துக்கள் சகோதரியாரே
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ReplyDeleteஏன் பதிவை தமிழ்மணத்தில் இணைப்பதில்லை...?
ReplyDeleteநல்ல மாணவன்.... மனமார்ந்த வாழ்த்துகள்!
ReplyDelete