World Tamil Blog Aggregator Thendral: எர்னஸ்ட் ஹெமிங்வேயின் ----கடலும் கிழவனும்-

Wednesday 17 December 2014

எர்னஸ்ட் ஹெமிங்வேயின் ----கடலும் கிழவனும்-

எர்னஸ்ட் ஹெமிங்வேயின் ----கடலும் கிழவனும்-

நோபல் பரிசு பெற்ற அமெரிக்க நாவல் தமிழில் ச.து.சு.யோகியார்.

15.12.14அன்று  கங்குலில்சென்னையிலிருந்து புதுகை நோக்கிய தொடர்வண்டிப்பயணம்...மெதுவாய் அந்தி மறைந்து பூமியை இருள் போர்வையால் இயற்கை மூடும் தருணம்...பறவைகளின் கீதம் மெதுவாய் குறைய ...வயல்களில் கூட்டமாய் எழும்பிப்பறந்தன நாரைகளின் கூட்டம் வெண்மேகமாய்..
விதவிதமான குரல்கள்...கோபம்,மகிழ்ச்சி,அரட்டை என ...கலவையான மனநிலையில் ...ஒருகணம் புத்தகத்தில் மூழ்க முடிவெடுத்து கடலும் கிழவனும் நாவலைப் படிக்கத் துவங்கினேன்...தரைப்பயணத்திலிருந்து..கடல் பயணத்துக்கு அழைத்துச்சென்று இன்னும் கடலுக்குள்ளேயே என்னை மூழ்கடித்த அந்த எழுத்தின் வன்மையை என்ன சொல்ல...அணுஅணுவாய்....கிழவன் தன்னோடு தானே உரையாடுவது ,மீனோடு உரையாடுவது,இயற்கையோடு உரையாடுவது என ஒரு நாவலையே படைத்து அதற்கு நோபல் பரிசும் கிடைத்துள்ளதென்றால் அதன் சிறப்பு அளவிட முடியாதது..

கடலும் கிழவனும்-கதையில்




வளைகுடாக்கடலில் மீன் பிடித்து தனித்து வாழும் சாந்தியகா கிழவன் பற்றிய கதை..கிழவனின் வீரம் .அவனது .84 நாட்களாக கடலுக்குச்சென்றும் மீன் கிடைக்காமல் தன்னுடன் துணைக்கு வந்த சிறுவனையும் அவன் பெற்றோர் தடுத்ததால் விட்டுவிட்டு கடலுக்கு மீன் பிடிக்கச்செல்கின்றான்...அங்கு நீண்ட தூரப்பயணத்திற்குப்பின் ஒரு மிகப்பெரிய மீன் ஒன்று. அவனது படகை விட நீளமான மீன் சிக்க அதை கொல்லமுடியாமல் அதன் போக்கிலேயே அலைக்கழிக்கவிட்டு 3 நாட்கள் போராட்டத்திற்கு பின் அதை கொன்று படகோடு கட்டி பெருமிதத்தோடு வரும் வழியிலேயே சுறாமீன்களுக்கு அப்பெரிய மீனை இரையாக்கி வெறும் மீனின் எலும்புக்கூட்டுடன் வீட்டுக்குத்திரும்பும் அவனது நைந்த உடலும் மனதும் பட்டபாடுகளையு ,படும்பாடுகளையும் மிக அருமையாக கூறி கண்முன் வாழவிடுகின்றார் ஆசிரியர்...சிறுவனுக்கும் கிழவனுக்கும் இடையேயான நட்பு மிக நுண்மையானதாக அமைந்துள்ளது...

கிழவனுக்கு பேஸ்பந்து விளையாட்டில் உள்ள ஆர்வம் பல இடங்களில் காணமுடிகின்றது...
சிக்கலான நேரங்களில் தனக்குத்தானே ஆறுதலும் தன்னம்பிக்கையும் கொடுத்துக்கொண்டு போராடுவது மிகவும் கவர்கின்றது.

மீன்கள் பற்றிய அழகான புரிதலை நாவல் கொடுக்கின்றது.

கடலில் கிழவனோடும்,மீனோடும்  நம்மையும் பயணிக்கவைக்கின்றது.

அனைவரும் படிக்க வேண்டிய நாவலாக கடலும் கிழவனும்

12 comments :

  1. நல்ல விமர்சனம் கூடுதல் கருத்துரை எழுத முடியவில்லை காரணம் வேலைப்பளு மட்டும்மல்ல தினம் தினம் ''சட்டீர் '' ''சட்டீர் '' என்ன செய்ய விதியின் கொடுமை

    ReplyDelete
  2. கதைச் சுருக்கத்துடன், சிறப்பான நூல் விமர்சன்ம். நூலினைப் பற்றிய மற்றைய விவரங்களையும் தந்து இருந்தால், விலைக்கு வாங்க ஏதுவாக இருக்கும்.
    த.ம.1

    ReplyDelete
  3. படிக்க வேண்டிய லிஸ்ட்டில் உள்ள புத்தகம்.

    ReplyDelete
  4. வணக்கம்
    நாவல் பற்றி தங்களின் பார்வையில் மிகச்சிறப்பாக சொல்லியுள்ளீர்கள்... படிக்க வேண்டிய நாவல் பகிர்வுக்கு நன்றி
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பருவமாறிந்து பருவச்சிறகை விரித்தேன்.:

    கவிதையாக என்பக்கம் வாருங்கள் அன்புடன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. முன்பொரு காலத்தில் படித்த கதை கவிஞரே!
    நீங்கள் சொல்லும் போது ஏதோ லேசாய் நினைவில் வருகிறது.
    நன்றி சகோ.
    த ம 2

    ReplyDelete
  6. அருமையான நூல் விமர்சனம் சகோதரியாரே
    அவசியம் வாங்கிப் படிக்கின்றேன்
    நன்றி

    ReplyDelete
  7. படித்து ரசிக்க வேண்டும்...

    ReplyDelete
  8. அந்த மீனை கொள்வதற்க்கான அவனின் முயற்சிகளின் மூலம் தன்னம்பிக்கைகான அடித்தளத்தினை விதைக்கும் மிக சிறப்பான நாவலாகும்.

    ReplyDelete
  9. அருமையான புத்தகம் , நல்ல பரிந்துரை!

    ReplyDelete
  10. இது மிகவும் அருமையான புத்தகம். எங்கள் இடுகைகளில் அவ்வப்போது குறிப்பிட்டதுண்டு

    ReplyDelete

  11. கடலில் கிழவனோடும்,மீனோடும் நம்மையும் பயணிக்கவைக்கின்றது.
    சிறப்பான விமர்சனம்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...