இப்படியும் சில ஜென்மங்கள்..
2014 ஜூலை மாதம் கின்னஸ் ரெக்கார்டுக்காக கவிதை வாசிக்கச் சென்னை சென்றபோது ,அங்கு வந்திருந்த சீர்காழியைச் சேர்ந்த ஒருவர் எனது விழி தூவிய விதைகள் நூலை பெற்றார்.
சில மாதங்களுக்கு பின் அலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் கவிதைகள் அருமை என்று பாராட்டி பேசினார்.மகிழ்ச்சி என்றேன்...வரும் சனவரியில் சென்னையில் பாராட்டு விழா வைக்கின்றோம் அதில் உங்களுக்கு விருது கொடுக்க உள்ளோம் என்றார்.
எதை வைத்து எனக்கு விருது கொடுக்க அழைக்கின்றீர்கள்...என்னை பற்றி எதுவும் தெரியாத நிலையில் மேலும் நான் இன்னும் வளர வேண்டும் என்று கூறி மறுத்துவிட்டேன்.மறுபடி அடிக்கடி பேசி உங்களுக்கு தெரிந்த வேறு யாரவது இருந்தால் அவசியம் சொல்லுங்கள்.ரூ3000 கொடுத்தால் போதும் என்றார்கள் அதிர்ச்சியில் உறைந்து விட்டேன்..
இப்படி நடக்குமென்று கேள்விப்பட்டுள்ளேன் ஆனா என்னிடமே கேட்பார்கள் என எதிர்பார்க்கவில்லை.எனக்கு அப்படி யாரும் தெரியாது என்றபோதும்,விடாமல் இரண்டு நாட்களாக எனது எங்கே போவேன் கவிதையை வாசித்து ஏன் இப்படி எங்களைப்பற்றி குறை சொல்றீங்க என்றார்.நான் உடனே இது 2004இல் எழுதிய கவிதை ஆனால் இன்றும் பெண்களின் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறை குறையவில்லையே...என்றேன்..ஆமாம் ஆனா உறுத்துது என்றார்.தவறு செய்பவர்களுக்குத்தானே உறுத்த வேண்டும் உங்களுக்கு ஏன் என்றேன்...
இல்லை உறுத்துது எனக்கு ஏன்னா நான் அப்படிதான் என்று மறைக்காமல் கூறினார்..மேலும் எனக்கு இரண்டு குழந்தைகள் இருவரும் வேலைக்குச்சென்று விட்டனர்..எனக்கு வயது 52,என் மனைவிக்கு வயது 48..திருமணம் ஆகி 25 வருடங்கள் ஆச்சு தினமும் சண்டைதான்...மேலும் ஒரே முகத்தையே பார்த்து போரடித்து விட்டது என்ரார்..இவர் எதற்கு இத்தனை பீடிகை போடுகின்றார் என்பது முன்பே உணர்ந்துவிட்டேன்..சார் நீங்கள் சொல்வது போல் உங்களின் மனைவியும் கூறினால் வலிக்கும் தானே என்றதும் அதை ஏற்க முடியாமல், எதிர்பார்க்காத காரணத்தால் தடுமாறி அவசரமாய் ஆம் ஆம் என்று வைத்துவிட்டார்.
இன்று மறுபடி அழைத்த போது.நான் இப்படி பணம் கொடுத்து விருது வாங்க விரும்ப மாட்டேன் மற்றவர்கள் இப்படி வாங்குவதற்கு நான் உதவி செய்யவும் மாட்டேன் என பட்டென்று கூறிவிட்டேன்..இப்படியொரு பதிலை அவர் யாரிடமும் கேட்டதில்லை போல..பிறகு நாங்கள் எப்படிதான் பிழைப்பது என்று வருத்தமாய் வைத்து விட்டார்..என்னத்த சொல்றது...இவர்கள் மாதிரி ஆட்களால் உண்மையான உழைப்பிற்கு விருது கிடைத்தாலும் வெளியே சொல்ல வெட்கப்படும் நிலை..
என் கோபத்தை வெளிக்காட்டாமல் பேச மிகவும் சிரமப்பட வேண்டிய நிலை...இனியும் வர வேண்டாம்..
இது போன்ற ஜென்மங்களிடம் கோபத்தை வெளிக் காட்டாமல் சிரமப்பட வேண்டியதில்லை என்பதே என் கருத்து. கோபத்தை பல மடங்கு காட்டத்தான் வேண்டும்
ReplyDeleteகாட்டியிருக்கலாம் அண்ணா ..நம்ம சக்தி தான் வீண் ...அவன் திருந்துற ஜென்மம் இல்லண்ணா..
Deleteஇது என்ன ? புதுசா இருக்கு விருதுக்கு 3000 ரூபாயா ?
ReplyDeleteநீங்கள் சொல்வதுபோல் இப்படியும் சில ஜென்மங்கள்.... உண்மைதான்.
ஆமாம் சகோ எனக்கும் அதிர்ச்சியாத்தான் இருக்கு..
Deleteஅடக் கொடுமையே! இப்படியும் சில அல்லக்கைகளா?
ReplyDeleteஆமாம் சகோ..கொடுமை..
Delete//சார் நீங்கள் சொல்வது போல் உங்களின் மனைவியும் கூறினால் வலிக்கும் தானே என்றதும் அதை ஏற்க முடியாமல், எதிர்பார்க்காத காரணத்தால் தடுமாறி அவசரமாய் ஆம் ஆம் என்று வைத்துவிட்டார்.//
ReplyDeleteநேராப் பொய் செருப்பால அடிச்சாக் கூட இதவிட கம்மியாதான் வலிக்கும்..
நீங்க சொல்றதப் பார்த்தா பலமுறை பலபேரிடம் அடிவாங்கி மரத்துப் போனவனாக இருக்க வேண்டும் ...
உண்மை தான் சகோ..அப்படி சொல்லியும் ...திருந்துன மாதிரி தெரியல..
Delete:-((((((((
ReplyDeleteநன்றி சகோ..
Deleteஉள்ளுர்களில் “...சுடர்“ 2000, “....மணி“ 3000,
ReplyDeleteசென்னை கலைமாமணி கொஞ்சம் அதிகம்னு கேள்விப்பட்டேன்
“நல்லாசிரியர் விருது” அமைச்ச்ர்கள் சொல்லும் விலைதான்.
“கௌரவ டாக்டர் பட்டம்“ பல்கலைக்கழகத்தைப் பொறுத்தது.
நாட்டில் விலைவாசி ஏறித்தான் விட்டது!!?????!!!!!!!
நீங்கள் இப்படி அப்பாவிக் கவிஞராயிருக்கீங்க?
ம்ம் கேள்விபட்டுருக்கேன் ..என் கிட்டயே நிகழும்னு தெரியல சகோ...
Deleteஅடப்பாவமே..
ReplyDeleteகொடுமைதான்..மா
Delete//பிறகு நாங்கள் எப்படிதான் பிழைப்பது என்று வருத்தமாய் வைத்து விட்டார்//
ReplyDeleteகொடுமை!
ரொம்பக்கொடுமை..தான் சார்
Deleteஇது போன்ற ஜென்மங்களை என்ன செய்வது...
ReplyDeleteகடுமையாக திட்டியிருக்க வேண்டும்...
திட்டுனாலும் உறைக்காத ஜென்மம் அது சகோ..
Deleteதமிழ்நாட்டில் பலபேருக்கு டாக்டர் பட்டம் இப்படிதான் கிடைத்ததோ?
ReplyDeleteஆமாம் ல அப்படியும் இருக்கலாம் தான்.
Deleteகுழலின்னிசை இசைக்கும் 2015 புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்க வளமுடன்!
திகழ்க நலமுடன்
தோழமையுடன்,
புதுவை வேலு
உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள் சார்.
Deleteவிருது வாங்குவது வடிவேல் காமெடி மாதிரி இருந்தாலும் மனதுக்கும் வேதனையாக உள்ளது.
ReplyDeleteஆமாம் சகோ..
Deleteஇப்படி எல்லாமா இருப்பார்கள் ஆச்சரியமாய்த்தான் இருக்கிறது கவிஞரே!
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி!
த ம 1
உண்மை சகோ..என்னால் அதிர்ச்சியிலிருந்து மீள்வது கடினமாயிருந்தது,...நன்றி
Deleteஎன்ன கொடுமைங்க இது...?
ReplyDeleteஆமாம் சார்...
Deleteஇப்படி எல்லாம்கூட பிசினெஸ் நடக்குதா?எச்சரிக்கைக்கு நன்றி.
ReplyDeleteயாராவது விருதுன்னா அலற வேண்டியதாயிருக்கு..சார்
Delete