லயனஸ் மண்டல சந்திப்பு-27.12.14
லயனஸ் மண்டல சந்திப்பு-27.12.14
ஆனந்த ஜோதியில் பத்திரிக்கையின் மூலம் எனக்கு அறிமுகமான மூத்த கவிஞரும், கண்ணதாசன் மேல் மாறாப்பற்று கொண்டவருமான ஆ.ச. மாரியப்பன் அய்யா அவர்கள் ஒரு நாள் எங்கள் பள்ளியில் என்னைக்காண வந்திருந்தார்.அவர் விடும் மூச்சே கண்ணதாசன் புகழ் பாடும்.
என்னை பார்த்து அம்மா மணப்பாறை லயனஸ் மண்டல சந்திப்பில் நீங்க பேசனும்மா என்றார்கள்.என்ன அய்யா திடீரென்று எனக்கேட்டேன். என்நண்பன் நவநீதம் கேட்டார்கள் நான் உங்களைச்சொன்னேன்மா பேசுங்கள் என்றார்.
கவிஞராக இருந்த என்னை உங்களால் பேச முடியும் பேசுங்கள் என்று ஊக்கமளித்து மேடையும் கொடுத்தார்கள் என் மேல் உள்ள நம்பிக்கையில் .பெண்கள் சந்திப்பு அதுவும் பெண்ணியக்கருத்துகள் என்றதும் ஒத்துக்கொண்டேன்...
ஒருவாரமாக இதே சிந்தனையில்...இதற்கான தயாரிப்பில் ...நகைச்சுவை என்பது மருந்துக்கூட வராத நான் எப்படி பார்வையாளர்களைக்கவரும் படி பேசுவது என்ற கவலையில்.
மணவை மதி.உதயன் சார் மற்றும் நவநீதம் சார் ஆகியோர் என்னை தொடர்பு கொண்டு நிகழ்வு குறித்து பேசினார்கள்.லயனஸ் பிரமிளாவும் அன்புடன் அழைத்த போது கொஞ்சம் துணிவு பிறந்தது...என் தோழமைகள் என்னை விடவும் என் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள்...அவர்கள் கொடுத்த ஊக்கத்தால் நேற்று எனது முதல் பேச்சு சிறப்புடன் அமைந்தது.
ஆசிரியராக மட்டுமே இருந்த என்னை கவிஞராக ,எழுத்தாளராக ,பேச்சாளராக வளர்க்கும் புதுக்கோட்டையில் வாழும் அன்பு உள்ளங்கள் என் வாழ்வின் முன்னேற்றத்திற்கு காரணமாய்..அமைந்துள்ளனர் என்பதை மனம் நெகிழக்கூறிக்கொள்கின்றேன்..
புதுகைச் சான்றோர்கள் என் திறமைகளை வெளிக்கொணர்ந்து தட்டித்தட்டி தங்கமாக்குகின்றனர்...அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.
மாலை வீட்டிற்கு வந்ததும் அலைபேசியில் சம்பத்குமார் சார் அவர்கள் அழைத்து இன்று நீங்கள் கம்பன் கழக கவியரங்க நிகழ்வில் ரேவதி என்பவருக்கு மாற்றாக கலந்து கொள்ள வேண்டும் என்ற போது முடியுமா என்று யோசித்த போது முடியும் செய்யுங்கள் என்று ஊக்கமளித்து வைத்துவிட்டார்.ஆனால் எப்படி முன் தயாரிப்பின்றி ஒருமணி நேரத்தில் ...ஆனாலும் ஏற்றுக்கொண்டதை செய்ய வேண்டும் என்ற உறுதியில் மேடை ஏறி விட்டேன் ..
கவிதையில் கரை கண்டவர்கள் முன் ...நான் முன் தயாரிப்பின்றி..மனதிலிருந்த அச்சத்தை மறைக்க .. கடினமாக இருந்தது..ஆனாலும் ..எல்லோரும் என்னை ஊக்கப்படுத்துவது போலவே பாராட்டி தொடருங்கள் என்ற போது அவர்களின் மேன்மை பண்பை உணர முடிந்தது..புதுக்கோட்டைக்கு பணி மாறுதல் காரணமாகவே வந்தவளை ...இவ்வளவு ஊக்கமளித்து என் உயர்விற்கு காரணமாயிருக்கும் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

Congratulations
ReplyDeleteநன்றி சகோ..
Deleteவாழ்த்துக்கள் சகோதரியாரே
ReplyDeleteநன்றி அண்ணா.
Deleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி சகோ..
Deleteஅன்புள்ள சகோதரி வேலுநாச்சியார்,
ReplyDeleteவணக்கம். மணப்பாறை லயனஸ் மண்டல சந்திப்பில் தாங்கள் கலந்து கொண்டதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியுற்றேன். தங்களின் முதல் பேச்சு சிறப்புடன் அமைந்ததை எண்ணி என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களை சந்திக்க இயலாமல் போனதில் எனக்கு மிகுந்த வருத்தமே! எனது அண்ணன் மகனின் திருமணத்திற்காக கோவை சென்றிருந்தால் தங்களை நேரில் பார்க்க இயலவில்லை.
கம்பன் கழக கவியரங்க நிகழ்வில் மாற்றாக கலந்து உடனடியாக சிறப்பாக நிகழ்வை சிறப்பித்துக் கொடுத்ததற்கு... அந்த அபாரத் திறமைக்காக எனது பாராட்டுகளைத் தெரிவித்து மகிழ்கின்றேன்.
நன்றி.
பரவால்ல சார்....பிறகு ஒரு நாள் சந்திப்போம் .வாழ்த்திற்கு நன்றி..
Deleteவாழ்த்துகள் அக்கா!! on the spot கவிதையா!!! ம்ம்ம்ம்....கலக்குங்க:))
ReplyDeleteஆமாம்மா ஆனாலும் சமாளிச்சுட்டேன்..ஆனா பக்பக்னு இருந்துச்சு..
Deleteமனப்பூர்வமான வாழ்த்துக்கள்.. திறமைகளை மேம்படுத்திக்கொள்ள இது போன்ற மேடைகள் உதவும்.
ReplyDeleteஉண்மை சார்...மிக்க நன்றி..
Deleteவாழ்த்துக்கள் சகோதரி.
ReplyDeleteமிக்க நன்றி சகோ..
Deleteவாழ்கவளர்க ஒரு புழு பட்டாம்பூச்சியாக மாற
ReplyDeleteஎத்தனை முயற்சிகள் இங்கு ஒரு பட்டாம்பூச்சி
அல்லவா பெண்ணாகமாறியுள்ளது சதாரன
விடயமா தோழி? வாழ்த்துக்கள்.