தமிழ்
------------
அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வியில் மாணவர்களின் சேர்க்கை அதிகமாகின்றது.கவலைப்படுவதா?மகிழ்வதா?தமிழும் முழுதாய் அறியாமல்,ஆங்கிலமும் முழுதாய் அறிய முடியாமல்..கற்கும் எதிர்கால சந்ததியின் நிலை.....?!
நடந்த பொதுத்தேர்வில் தமிழில்தான் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவு. காரணம் அறிய ஆய்வு நடத்தப்படுகிறதாம்...!
பள்ளிகளில் தமிழின் மதிப்பை நாமே குறைத்துவிட்டோம்.கட் ஆஃப் மதிப்பெண்ணில் தமிழையும் சேர்த்தால் மட்டுமே கொஞ்சமாவது மதிப்பு கிடைக்கும் போல.இல்லையெனில் தேர்விற்கு முதல் நாள் கடமைக்கு படித்து ஒதுக்குகின்ற நிலை தான் மேலும் நீடிக்கும்..
கவனிக்கப்பட வேண்டிய விடயம்.
இன்னும் சில வருடங்களில் தமிழ் படிக்கும் மாணவர்களே இல்லாத நிலை ஏற்படவும் வாய்ப்புள்ளது.
தமிழாசிரியர்கள் இதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும்...
தமிழின் சிறப்பை உணர்ந்து உணர்வோடு கற்பிக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அரிதாகிக் கொண்டு வருகின்றது என்பது மறுக்கவியலா ஒன்று...!
தமிழ் தானே இல்லை தமிழ் தான் தாய்மொழி என்ற உணர்வை எப்போது ஊட்டப் போகின்றோம்...?
தங்கள் கருத்தோடு முற்றிலும் உடன்படுகிறேன் நன்றி!
ReplyDeleteகவிஞரே... திருவண்ணாமலை போய்வந்ததிலிருந்தே நீங்க என் வலைப்பதிவுகளைப் பார்க்கறதில்லனு தெரியும்.
ReplyDeleteஇந்த உங்க கவலை எனக்கும் வந்ததையும், அதற்கு எனக்குத் தோன்றிய தீர்வையும் எழுதியிருக்கிறேன் .பார்க்க..http://valarumkavithai.blogspot.in/2014/05/blog-post_26.html
வணக்கம்
ReplyDeleteசகோதரி
உண்மைதான் ஆதங்கம் புரிகிறது
அது மட்டுமா. மக்கள் தொலைக்காட்சியில் போகும்
(சொல்லுங்கள் அண்ணேசொல்லுங்கள்)என்ற நிகழ்ச்சில் பாருங்கள் ஒரு பொருளுக்கு தமிழ் வார்த்தை தெரியாமல் தத்தளிக்கும் நிலையை இவை எல்லாம் நினைக்கும் போது மனவேதனையாகத்தான் இருக்கிறது..
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருத்தம் தரும் செய்தி தோழி!
ReplyDeleteஎன்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் ஓலம்...
நாமாகவே அடிமைகளாகின்றோம். அதிலும் இந்த ஆங்கில, வேற்று மொழி நாகரீக அடிமைத்தனம்...
என்னவெனச் சொல்ல...
ஆங்கிலத்தைப்பறிய அறிவு வேறு,அதற்காக தன அறிவை இழப்பது வேறு,ஒரு தலை முறையே ஆங்கிலத்தில் தன் அறிவை இழந்து கொண்டிருக்கிறது என்பதுவே நிஜமாய் தெரிகிறது இங்கு.
ReplyDeleteதமிழில் தோல்வி அதிகம் ஏன் ?....என் கட்டுரை படித்தீர்களா...?!
ReplyDelete