Wednesday 11 June 2014

மாறிய உலகம்

பதின் வயதில் பாவாடைக்கட்டி
பறக்கும் ஆசையும்,
பருவத்தில் தாவணி புடவையில்
காளையரை  கவரும் ஆசையும்,
மனம் படபடக்க காதலன்
முத்தமிட உடலெங்கும்
மின்சாரம் பாயும் ஆசையும்,
உடல்வளைத்து அழகு திமிர
ஒய்யாரமாய் நடந்து
கணவனை அன்பில் வீழ்த்தும் ஆசையும்,
வந்தது கண்டு அருவெறுத்து விரட்டிய
உறவுகளிடம்   அடையாளம் அறுத்து
பெண்ணாய் மாறிய மகிழ்வை
பகிர்ந்து கொள்ளும் ஆசையும்
 தாங்கி உலவுகின்றோம்
எங்கள் உலகில்....!


7 comments:

  1. உண்மைதான்..திருநங்கைகள் கலந்துகொண்ட நீயா நானா பார்த்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் மா நலமா? நன்றிம்மா

      Delete
  2. கவிதை மழைபோல் கொட்டுது..
    நல்லாக் கொட்டட்டும்
    வித்யாசமான கரு
    கலக்குங்க சகோதரி
    http://www.malartharu.org/2014/03/jameen-and-palani-murugan.html

    ReplyDelete
  3. மிக்க நன்றி சார்

    ReplyDelete
  4. பாடு பொருளும், பாடப் பட்ட விதமும் ரொம்ப வித்யாசமாக இருக்கு சகோதரி..! '.....தாங்கி உலவுகின்றோம் ..எங்கள் உலகில்.'....இந்த வரிகளில் அவர்களின் உலகம் வேறு; நாம் அவர்களை ஒதுக்கி வைத்திருக்கும் சமூக அவலம்' நச்' சென்று வெளிப்பட்டிருக்கிறது..கவிதைப் பயணம் தொடர வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  5. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
    http://blogintamil.blogspot.com/2014/06/teachers-in-web-world.html?showComment=1403974193240#c6401072316413391899

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. அவ்வப்போது தங்களின் பதிவுகளைப் படித்துவருகிறேன். தற்போது வலைச்சரம் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டதை அறிந்தேன். வாழ்த்துக்கள்.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...