Tuesday 10 June 2014

தங்கமகள்

கண் விழித்து கற்று
வகைவகையாய் வரைந்து
கட்டிடப் பொறியியலில்
களிப்புடனே கோல்டு மெடல்
பெற்ற மனைவியை.......!

வட்டவட்டமாய் ஆடைதனை
கண்ட இடத்தில் கழட்டி வீசும் கணவன்

வட்டமாய் தோசையில்லையென்றும்
அம்மாவின் குழம்பைப் போல் வாராதென்றும்
தன் குடும்பத்துடன் நக்கலடிக்கின்றான்
அப்பாவின் பிரதிபலிப்பாய்..... !

எதிரிலிருப்பவளை
 எரிமலைக் குழம்பாய்
ஆக்குவதை உணராமல்...!


5 comments:

  1. ஆண் மனங்களில் அமிழ்ந்துறைகின்ற பெண்ணடிமைத்தனத்தின் குரல்வளையை நெறிக்கும் உங்கள் கவிக்குரல் உரக்க ஒலிக்கட்டும். நல்ல கவிதைக்கு நன்றி.

    ReplyDelete
  2. ஆணுக்கு சமமாய் வேலை பார்க்கும் பெண்களின் திறமையை இன்னும் சமையல் , வீட்டு வேலைகளை வைத்து தானே மதிப்பிடுகிறார்கள் ! அருமையான கவிதை!

    ReplyDelete
  3. அது தானே என் தோழி மைதிலி சொல்வது சரியே.

    ReplyDelete
  4. தங்க மகளைப் பற்றிய தங்களின் பதிவு நிதர்சனமானது.

    ReplyDelete
  5. ஆசையாய் படிக்க வைத்து
    ஒருவனுக்கு
    திருமணம் செய்து அனுப்பினால்
    பலர் இப்படித் தான் மதிப்பீடு
    சில விதிவிலக்குகளும் உண்டு
    இருந்தாலும்
    உங்கள்
    பெண்ணியம் மீண்டும் சுடர்கிற கவிதை
    வாழ்த்துக்கள் சகோதரி
    http://www.malartharu.org/2014/03/jameen-and-palani-murugan.html

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...