கங்குலில்
மொட்டை மாடியில்
மலரும் கனவுகளோடு
துயில் கொள்ளும் வேலையில்
கண்சிமிட்டி வம்பிழுத்தவர்களை
வலைவீசி பிடிக்க இயலாது
வாடிய என்னை
தேற்றும் விதமாய்
அத்துணை பேரையும்
புவியீர்ப்பு விசையென
கிளைதனில் ஈர்த்து
என் காலடியில்
காலையில் சமர்பித்தது
வேம்பு
பூக்களாய்...!
அருமை...
ReplyDeleteஅருமை சகோதரியாரே
ReplyDeleteஅட அட..என்ன ஒரு கற்பனை..மிக அருமை கீதா..
ReplyDeleteவேப்பம் பூக்களின் வாசம் சிறப்பாக இருக்கும்! நட்சத்திரமாக கற்பனை செய்தது சிறப்பு! நன்றி!
ReplyDeleteகாலடி விண்மீனாய் வேப்பம்பூ .அழகு!!
ReplyDelete