Saturday, 16 November 2013

மறையும் மனித நேயம்

குழந்தைகள் தினம்
மாணவிகளுடன் மகிழ்வாய் வாழ்த்துகள் பகிர்ந்து மகிழ்ந்த தருணத்தில் ஒரு மாணவி காதில் பேப்பரை நுழைத்துக்கொண்டாள்.மிகவும் அமைதியான சிறுமி.எப்படியென்று அவளுக்கே தெரியவில்லை.அவள் அம்மாவிற்கு தெரிவித்த போது அவர்கள் வெளியூரில் சித்தாள் வேலை செய்வதால் வர இயலாது,பேருந்தில் அனுப்பி விடுங்க என சாதாரணமாக கூறி விட்டு அவளை அலைபேசியிலேயே திட்டினார்கள் .என் மாணவியை அவள் அம்மாவாகவே இருந்தாலும் என் முன் திட்டுவதை பொறுத்துக்கொள்ள இயலாமல் அவர்களை திட்டாதீர்கள் என கூறி அவளை கூட்டிக்கொண்டு அரசு மருத்துவமனைக்குச் சென்றோம் அங்கு மருத்துவர் பணி முடித்து சென்று விட்டதால் அவரின் கிளினிக்கல பார்க்க சென்றோம்.பள்ளி மாணவி என்றும் விரைவாக பார்த்து விட்டு செல்ல வேண்டும் என தெரிந்தவர்கள் மூலம் கேட்டுக் கொண்டோம்.

சிறிது நேரம் கழித்து அழைத்தனர் அதற்குள் அங்கிருந்தவர்கள் எப்படி விட்ட காதுக்குள்ளன்னு துளைத்து எடுத்து டீச்சர கஷ்ட படுத்துறன்னு சொல்ல ஆரம்பிக்கவும் ,அவள் அமைதியான பெண் தெரியாம போயிடுச்சு கேட்டு கஷ்ட படுத்தாதீங்கன்னு சொல்லி டாக்டரைப் பார்க்க உள்ளே சென்றோம்.
அவர் ஏன் இப்படி செஞ்ச என்ற கேள்வியுடன் பேப்பரை எடுத்து விட்டு ஊசி ,மாத்திரை ,சொட்டு மருந்து என எழுதிக்கொடுத்தார் அவரிடம் மாணவியின் அம்மா சித்தாள் வேலை வெளியூரில் உள்ளார் வரமுடியாத நிலை என்று நான் கூறியதை காதில் வாங்கிகொள்ளவே இல்லை.
அனைத்தையும் வாங்கி ஊசி போட்டுக்கொண்டு வந்தோம்.ரூ169 கொடுங்கன்னு கேட்டார் அங்கு பணி
புரிபவர்.கொடுத்துவிட்டு வந்தேன்.பணம் ஒரு பொருட்டல்ல எனக்கு.
ஆனால் மனதில் ஒரு உறுத்தல் அவர் ஒரு அரசு மருத்துவர்,மனித நேயத்தோடு இருந்தால் அரசு பள்ளி மாணவிக்கு இலவசமாகவே மருத்துவம் பார்த்திருக்கலாம்.ஆனால்....?!மனித நேயத்தை
எல்லோரிடமும் எதிர்பார்க்க முடியாது,மருத்துவரிடமும் கூடவா?

7 comments:

  1. மருத்துவத்தின் மறுபெயர் வணிகம்.

    ReplyDelete
  2. சகோதரியாரே மீண்டும் தங்களின் தளத்திற்கு வருகிறேன். கவிஞர் முத்து நிலவன் அவர்களின் வலைப் பூவில் தங்களின் கவிதை நூல் பற்றி அறிந்து மகிழ்ந்தேன்.
    கவிஞர் முத்து நிலவன் ஐயா அவர்களின் அறிமுக உரையே தங்களின் நூலினைப் படிக்க வேண்டும் என்ற ஆவலினைத் தூண்டுகின்றது. வாழ்த்துக்கள் சகோதரியாரே. தொடருங்கள்

    ReplyDelete
  3. எல்லாமே பணம் ஆகி விட்டது...!

    ReplyDelete
  4. மருத்துவம் ஒரு வணிகமாகிவிட்டக் காலம்...ஆனாலும் சில நல்ல மருத்துவர்களும் இருக்கிறார்கள்..அவர்களைக் கண்டுபிடித்துச் செல்வதுதான் கடினம்!
    மாணவிக்குத் தேவையானதைச் செய்த உங்களுக்குப் பாராட்டுகள்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...